வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 288 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் வழக்கம் போல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 80 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில், 9 பவுண்டரியும், 2 சிக்ஸரும் அடங்கும்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 100ஆவது டெஸ்ட் போட்டி: நினைவு பரிசு வழங்கிய பிரையன் லாரா!
இதே போன்று அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 57 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சுப்மன் கில் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே 8 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்த்து ரன்கள் குவிப்பில் ஈடுபட்டனர்.
முகேஷ் குமாரை வைத்து டெஸ்ட் செய்ய தயாரான டீம் இந்தியா; வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்!
இது விராட் கோலியின் 500ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய விராட் கோலி 97ஆவது பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் அடித்தார். இதன் மூலமாக 500ஆவது போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், எம்.எஸ்.தோனி என்று யாரும் 500ஆவது போட்டியில் அரைசதம் அடிக்கவில்லை.
ஆசிய கோப்பை 2023 அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் 3 முறை மோத வாய்ப்பு!
மறுபுறம் விராட் கோலிக்கு இணையாக ரவீந்திர ஜடேஜாவும் ரன்கள் சேர்த்தார். அவர், 84 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இதில், விராட் கோலி 87 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.