இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நடந்தது. இதில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களும், ரோகித் சர்மா 103 ரன்களும், விராட் கோலி 76 ரன்களும் எடுத்தனர்.
ஆசிய கோப்பை 2023 அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் 3 முறை மோத வாய்ப்பு!
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, அஜின்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயதேவ் உனத்கட், முகேஷ் குமார், முகமது சிராஜ்.
வெஸ்ட் இண்டீஸ்:
கிரேக் பிராத்வைட் (கேப்டன்), டேகனரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன், ஷானன் கேப்ரியல்.
ஆஷஸ் 4ஆவது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா? இங்கிலாந்து பவுலிங்!
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயீன்ஸ் பார்க் ஓவலில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரேக் பிராத்வைட் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி விரட் கோலிக்கு 500ஆவது சர்வதேச போட்டியாகும்.
செப்டம்பர் 2ல் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை: ஆசிய கோப்பை அட்டவணை இன்று இரவு வெளியாக வாய்ப்பு!
இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக அறிமுக வீரராக முகேஷ் குமார் அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் கூட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஷானன் கேப்ரியல் அணியில் இடம் பெற்றுள்ளார். கிர்க் மெக்கென்சி இந்தப் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.