500ஆவது போட்டியில் சாதிக்க காத்திருக்கும் விராட் கோலி!

By Rsiva kumar  |  First Published Jul 19, 2023, 5:43 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாட இருக்கிறார்.


வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியிலுள்ள குயீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது.

ஆஷஸ் 4ஆவது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா? இங்கிலாந்து பவுலிங்!

Tap to resize

Latest Videos

முதல் போட்டியில் விளையாடிய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளில் அங்கமாக இருந்த 2 ஆவது இந்திய வீரர் (296) என்ற எம்.எஸ்.தோனியின் (295) சாதனையை உடைத்துள்ளார். அதோடு, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (307) முறியடிக்க உள்ளார். அதற்கு முன்னதாக, இந்த 2ஆவது போட்டியில் விளையாடுவதன் மூலமாக விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

செப்டம்பர் 2ல் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை: ஆசிய கோப்பை அட்டவணை இன்று இரவு வெளியாக வாய்ப்பு!

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் விராட் கோலி இதுவரையில் 110 டெஸ்ட், 274 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 374 டி20 போட்டுகள் என்று மொத்தமாக 499 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் மூலம் மொத்தமாக 25000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34,357 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 535 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆசிய கோப்பை 2023: கேஎல் ராகுல் இடம் பெற வாய்ப்பில்லை?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 504 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரையில் 72 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவதற்கு சச்சின் டெண்டுல்கர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். 58 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்துள்ளார்.

இதுவரையில் விளையாடிய முன்னாள் ஜாம்பவான்கள் 500ஆவது போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. சச்சின் உள்பட யாரும் 100ஆவது டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்துள்ளனர். விராட் கோலி 100ஆவது போட்டியில் 66, 200ஆவது போட்டியில் 49, 300ஆவது போட்டியில் 4, 400ஆவது போட்டியில் 9 என்ற குறைந்த ரன்களையே எடுத்துள்ளார். இந்த நிலையில், 500ஆவது போட்டியில் விளையாடும் விராட் கோலி சதம், அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 499 போட்டிகளில் விளையாடியுள்ள 75 சதமும், 131 அரைசதமும், 25,461 ரன்களும், 2522 பவுண்டரிகளும், 279 சிக்சர்களும் விளாசியுள்ளார்.

ஏன், எதற்கு நீக்கப்பட்டேன்: ஒன்னுமே புரியல; புழம்பி தவிக்கும் பிரித்வி ஷா!

click me!