ஆஷஸ் 4ஆவது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா? இங்கிலாந்து பவுலிங்!

By Rsiva kumar  |  First Published Jul 19, 2023, 3:47 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது.


இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. 3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.

செப்டம்பர் 2ல் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை: ஆசிய கோப்பை அட்டவணை இன்று இரவு வெளியாக வாய்ப்பு!

Tap to resize

Latest Videos

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடுகிறது.

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவென் ஸ்மித், டிராவிட் ஹெட், மிட்செல் மார்ஷ், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட்.

ஆசிய கோப்பை 2023: கேஎல் ராகுல் இடம் பெற வாய்ப்பில்லை?

இங்கிலாந்து:

பென் டக்கெட், ஜாக் கிராவ்லி, மொயீன் அலி, ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஏன், எதற்கு நீக்கப்பட்டேன்: ஒன்னுமே புரியல; புழம்பி தவிக்கும் பிரித்வி ஷா!

click me!