இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 100ஆவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் விளையாடும் நிலையில், இந்திய அணிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களும், ரோகித் சர்மா 103 ரன்களும், விராட் கோலி 76 ரன்களும் எடுத்தனர்.
முகேஷ் குமாரை வைத்து டெஸ்ட் செய்ய தயாரான டீம் இந்தியா; வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்!
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயீன்ஸ் பார்க் ஓவலில் நடக்கிறது. இது இரு அணிகளுக்கு இடையிலான 100ஆவது டெஸ்ட் போட்டி ஆகும். இதன் காரணமாக இரு அணி வீரர்களும் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு இந்திய அணிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா, ரோகித் சர்மாவுக்கு அந்த சிறப்பு நினைவுப் பரிசை வழங்கினார்.
ஆசிய கோப்பை 2023 அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் 3 முறை மோத வாய்ப்பு!
இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரேக் பிராத்வைட் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி விரட் கோலிக்கு 500ஆவது சர்வதேச போட்டியாகும்.
A group picture of India & West Indies team before the historic Test. pic.twitter.com/hi9mhwdYBL
— Johns. (@CricCrazyJohns)
இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக அறிமுக வீரராக முகேஷ் குமார் அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் கூட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஷானன் கேப்ரியல் அணியில் இடம் பெற்றுள்ளார். கிர்க் மெக்கென்சி இந்தப் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
செப்டம்பர் 2ல் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை: ஆசிய கோப்பை அட்டவணை இன்று இரவு வெளியாக வாய்ப்பு!
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, அஜின்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயதேவ் உனத்கட், முகேஷ் குமார், முகமது சிராஜ்.
ஆஷஸ் 4ஆவது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா? இங்கிலாந்து பவுலிங்!
வெஸ்ட் இண்டீஸ்:
கிரேக் பிராத்வைட் (கேப்டன்), டேகனரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன், ஷானன் கேப்ரியல்.
A special memento for Indian team for the 100th Test between India vs West Indies. pic.twitter.com/HVvc1eN0PN
— Johns. (@CricCrazyJohns)