பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி சாதனை படைத்த பில்லி இபதுல்லா காலமானார்.
கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் பில்லி இபதுல்லா. பாகிஸ்தான் அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 253 ரன்கள் எடுத்தார். மேலும், ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார். தனது அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி சாதனை படைத்தார். முதல் முதலாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இந்தப் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர். அப்போது பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த ஹனீஃப் முகமதுவின் வற்புறுத்தலின் பேரில் இபதுல்லா அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 166 ரன்கள் குவித்தார். அறிமுக போட்டியில் 249 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவிக்க முக்கிய காரணமாகவும் இருந்தார். இபதுல்லா மற்றும் மற்றொரு அறிமுக வீரர் அபதுல் காதிர் இருவரும் இணைந்து 249 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தனர். இதற்கு முன்னதாக அமீர் சோகைல் மற்றும் இஜாஸ் அகமது இருவரும் எடுத்த ரன்களே அதிகபட்சமாக இருந்துள்ளது.
முகேஷ் குமார் வேகத்தில் 125 ரன்களுக்கு சரண்டரான ஜிம்பாப்வே –4-1 என்று தொடரை கைப்பற்றிய இந்தியா!
இந்த சாதனையை அறிமுக வீரர்களான இபதுல்லா மற்றும் அப்துல் காதிர் இருவரும் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர். இந்த நிலையில் தான் பில்லி இபதுல்லா வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 88. இவருக்கு கசீம் இபதுல்லா என்ற மகன் இருக்கிறார். இவரும், கிரிக்கெட் விளையாடி வருகிறார். 31 ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் விளையாடிய இபதுல்லா, 19 லிஸ்ட் ஏ கேம்ஸ் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.