Anant Weds Radhika: மணமக்களை வாழ்த்தி இன்ஸ்டாவில் பதிவு போட்ட தோனி – என்ன சொல்லி வாழ்த்தியிருக்காரு தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Jul 14, 2024, 8:00 PM IST

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் தம்பதியினரை வாழ்த்தி தனது இன்ஸ்டாவில் தோனி பதிவு போட்டுள்ளார்.


மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடந்துள்ளது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானிக்காக, அந்த சொர்க்கத்தை, பூமிக்கே கொண்டு வந்திருக்கிறார் முகேஷ் அம்பானி என்று தான் கூற வேண்டும்.

பொறுப்பே இல்லாம விளையாடிய கில், தட்டு தடுமாறிய இந்திய அணிக்கு நல்ல ஸ்கோர் எடுத்து கொடுத்த சஞ்சு சாம்சன்!

Tap to resize

Latest Videos

கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபர் விரென் மெர்ச்சண்ட் அவர்களின் இளைய மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, இந்த ஜோடியின் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டங்கள் இந்தியாவில் வெகுஜோராக கொண்டாடப்பட்டது. பல முக்கிய அரசியல் மற்றும் சினிமாத்துறை பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

PAKCH vs INDCH: பாகிஸ்தான் வீரருக்கு உதவி செய்த ராபின் உத்தப்பா – எக்ஸ் பக்கத்தில் குவியும் வாழ்த்து!

இதனைத் தொடர்ந்து இத்தாலி நாட்டு கடற்கரையில், சொகுசு கப்பலில் மூன்று நாள் பயணமாக விமர்சையாக ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் தோனி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த சூழலில் 12ம் தேதி, மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில், ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் இன்னும் சில மணி நேரத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அன்ஷுமான் கெய்க்வாட் – ரூ.1 கோடி நிதியுதவி அளித்த ஜெய் ஷா!

ஏற்கனவே வெளிநாடுகளை சேர்ந்த பல முக்கிய பாடகர்கள் நேரில் வந்து ஆனந்த அம்பானியின் திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில், தற்பொழுது பிரபல WWE வீரர் ஜான் சீனா இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். மும்பை நகரமே விழாக்கோலம் கொண்டுள்ள சூழலில், பாலிவுட் உலகை சேர்ந்த பல முக்கிய நடிகர்கள், நடிகைகள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

TNPL 2024, LKK vs NRK: அதிரடியாக விளையாடிய சச்சின் – லைகா கோவை கிங்ஸ் அணிக்கு கிடைத்த 3ஆவது வெற்றி!

இந்த நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சியில் தனது குடும்பத்தோடு கலந்து கொண்ட தோனி மணமக்களை வாழ்த்தி பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ராதிகா உங்களது புன்னகை என்றும் மறையாது. ஆனந்த் உங்களை சுற்றியுள்ள அனைவரிடமும் நீங்கள் காட்டும் அதே அன்புடனும், கருணையுடனும் ராதிகாவை தொடர்ந்து அன்புடன் கவனித்து கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் சாகசத்தால் நிறைந்ததாக இருக்கட்டும். வாழ்த்துகள் விரைவில் சந்திப்போம் நண்பர்களே என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781)

 

click me!