ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்று கைப்பற்றியுள்ளது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது ஹராரேயில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் ருதுராஜ் கெய்க்வாட், கலீல் அகமது நீக்கப்பட்டு ரியான் பராக் மற்றும் முகேஷ் குமார் இருவரும் அணியில் இடம் பெற்றனர். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது. இதில், சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே 26 ரன்கள் எடுத்தார்.
undefined
பின்னர் கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் வெஸ்லி மாதெவரே 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்து பிரையன் பென்னட் 10 ரன்களில் நடையை கட்டினார். தடிவானாஷே மருமணி 27 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். டியான் மியார்ஸ் அதிரடியாக விளையாடிய நிலையில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்வரிசையில் வந்த கேப்டன் சிக்கந்தர் ராஸா 8, ஜோனாதன் காம்ப்பெல் 4, கிளைவ் மடண்டே 1, பிராண்ட மவுடா 4, ரிச்சர்டு ங்கரவா 0 என்று சொற்ப ரன்களில் நடையை கட்டினர். பராஸ் அக்ரம் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக ஜிம்பாப்வே 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா விளையாடிய கடைசி 4 போட்டியிலும் தொடர் வெற்றியோடு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்று கைப்பற்றியுள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.