Asia Cup 2023, Pakistan vs Nepal 1st Match: புதிய சாதனை படைத்த பாகிஸ்தான்; ஒரு கேப்டனாக சாதித்த பாபர் அசாம்!

By Rsiva kumar  |  First Published Aug 30, 2023, 7:36 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேபாள் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் 342 ரன்கள் குவித்துள்ளது.


ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டின் முதல் லீக் போட்டி இன்று பாகிஸ்தானில் உள்ள முல்தான் பகுதியில் தொடங்கியது. இதில், நேபாள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது.

Pakistan vs Nepal:சொந்த மண்ணில் சரவெடியாக வெடித்த பாபர் அசாம், இப்திகார் அகமது; பாகிஸ்தான் 342 ரன்கள் குவிப்பு!

Tap to resize

Latest Videos

இதில், கேப்டன் பாபர் அசாம் 131 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 151 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில், அவரது 19ஆவது ஒரு நாள் போட்டி சதம் ஆகும். அதோடு இரண்டாவது முறையாக 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 139 பந்துகளில் 158 ரன்கள் எடுத்திருந்தார். இதே போன்று மற்றொரு வீரர் இப்திகார் அகமது தனது முதல் ஒரு நாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தார்.

அவர், 71 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உள்பட 109 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் 342 ரன்கள் குவித்துள்ளது.

Paksitan vs Nepal: தனக்கு தானே ஆப்பு வச்சுக்கிட்ட முகமது ரிஸ்வான்; விரக்தியடைந்த பாபர் அசாம்!

ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்:

214 ரன்கள் - பாபர் அசாம் – இப்திகார் அகமது – பாகிஸ்தான் – நேபாள் – முல்தான், 2023

ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் கேப்டனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்கள்:

158 ரன்கள் - பாபர் அசாம் – இங்கிலாந்த், எட்ஜ்பஸ்டான், 2021

151 ரன்கள் – பாபர் அசாம் – நேபாள், முல்தான், 2023

125* ரன்கள் - சோயிப் மாலிக் – இந்தியா, கராச்சி 2008

125 ரன்கள் – பாபர் அசாம் – ஜிம்பாப்வே, ராவல்பிண்டி, 2020

124 ரன்கள் – ஷாகித் அப்ரிதி – வங்கதேசம், டம்புல்லா, 2010

Nepal vs Paskitan: வரலாற்றில் முதல் முறையாக ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் நேபாள்!

பாகிஸ்தானுக்கான அதிவேக ஒருநாள் சதங்கள் (எதிர்ப்பட்ட பந்துகள்):

37 பந்துகள் – ஷாகித் அப்ரிதி – இலங்கை, நைரோபி, 1996

45 பந்துகள் - ஷாகித் அப்ரிதி – இலங்கை, கான்பூர், 2005

53 பந்துகள் - ஷாகித் அப்ரிதி – வங்கதேசம், டம்புல்லா, 2010

61 பந்துகள் – ஷார்ஜீல் கான் – அயலாந்து, மலஹைடு, 2016

67 பந்துகள் – பாசித் அலி – வெஸ்ட் இண்டீஸ், ஷார்ஜா, 1993

67 – இப்திகார் அகமது – நேபாள், முல்தான், 2023

Asia Cup Opening Ceremony: ஐமா பேக், திரிஷாலா குருங் இசை நிகழ்ச்சியுடன் பிரமாண்டமாக தொடங்கிய ஆசிய கோப்பை 2023!

4வது விக்கெட்டுக்கு அல்லது அதற்கும் குறைவான விக்கெட்டுக்கு பாகிஸ்தானுக்கு ஒருநாள் போட்டிகளில் அதிக பார்ட்னர்ஷிப்கள்:

214 ரன்கள் – பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது – நேபாள், முல்தான், 2023

206 ரன்கள் – முகமது யூசுப் மற்றும் சோயிப் மாலிக், இந்தியா – செஞ்சூரியன், 2009

198* ரன்கள் – மிஸ்பா உல் ஹக் மற்றும் கம்ரான் அக்மல் – ஆஸ்திரேலியா, அபுதாபி, 2009

176 – யூனிஸ் கான் மற்றும் உமர் அக்மல் – இலங்கை, கொழும்பு, 2009

172 ரன்கள் – சலீம் மாலிக் மற்றும் பாசில் அலி- வெஸ்ட் இண்டீஸ் - ஷார்ஜா, 1993

click me!