உலகக் கோப்பையில் புதிய வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் – 344 ரன்களை சேஸ் செய்து பிரம்மாண்ட வெற்றி!

By Rsiva kumar  |  First Published Oct 10, 2023, 11:01 PM IST

இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.


பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 8ஆவது லீக் போட்டி தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் ஆடியது. இதில் குசால் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரமா ஆகியோரது அதிரடியான சதம் காரணமாக இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 344 ரன்கள் குவித்தது.

Pakistan vs Sri Lanka: அறிமுக உலகக் கோப்பையிலேயே சதம் அடித்து சாதனை படைத்த அப்துல்லா ஷபீக்!

Tap to resize

Latest Videos

பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடினார். ஃபகர் ஜமானுக்குப் பதிலாக இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவருடன் இமாம் உல் ஹக் தொடக்க வீரராக களமிறங்கினார். அவர், 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷபீக் உடன் முகமது ரிஸ்வான் களமிறங்கி ரன்கள் சேர்த்தனர்.

ENG vs BAN: வரிசை கட்டி அவுட்டான டாப் பிளேயர்ஸ் – வங்கதேசம் 227க்கு ஆல் அவுட்; இங்கிலாந்து முதல் வெற்றி!

இதில், ஷபீக் நிதானமாக விளையாடி 103 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக தனது முதல் உலகக் கோப்பையில் சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி அறிமுக உலகக் கோப்பையிலே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக,

பாகிஸ்தானை பந்தாடி உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த மெண்டிஸ், சமரவிக்ரமா – இலங்கை 344 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்காக உலகக் கோப்பை அறிமுகத்தில் அதிக ஸ்கோர்கள்:

113 - அப்துல்லா ஷபிக் vs இலங்கை    , ஹைதராபாத், 2023*

82 - மொசின் கான் vs இலங்கை, ஸ்வான்சீ, 1983

78* - அசாத் ஷபீக் vs ஜிம்பாப்வே, பல்லேகலே, 2011

76 - ரமீஸ் ராஜா vs இலங்கை, ஹைதராபாத் (பாகிஸ்தான்), 1987

71 - உமர் அக்மல் vs கென்யா, ஹம்பந்தோட்டா, 2011

Pakistan vs Sri Lanka: ஒரு விக்கெட் கீப்பராக குமார் சங்கக்காரா சாதனையை முறியடித்த குசால் மெண்டிஸ்!

உலகக் கோப்பையில் 100 சதம் அடித்த இளம் பாகிஸ்தான் வீரர்:

23 வயது 195 நாட்கள் - இமாம்-உல்-ஹக் vs வங்கதேசம், லார்ட்ஸ், 2019

23 வயது 324 நாட்கள் - அப்துல்லா ஷபிக் vs இலங்கை, ஹைதராபாத், 2023*

24 வயது 192 நாட்கள் - சலீம் மாலிக் vs இலங்கை, ஃபைசலாபாத், 1987

24 வயது 254 நாட்கள் - பாபர் அசாம் vs நியூசிலாந்து, பர்மிங்காம், 2019

அதன் பிறகு முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் சகீல் இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். கடைசியாக சகீல் 31 ரன்களில் வெளியேறவே அடுத்து இப்திகார் அகமது களமிறங்கினார். ஒருபுறம் நிதானமாக தனது கால் வலியையும் பொருட்படுத்தாமல் விளையாடிய முகமது ரிஸ்வான் ஒருநாள் போட்டியில் தனது 3ஆவது சதத்தை பதிவு செய்தார். ஒரு விக்கெட் கீப்பராக பாகிஸ்தானுக்கு அணிக்கு சதம் அடித்தக் கொடுத்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஸ்குவாஷ், கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்றது – பதக்கம் வென்ற வீரர்களுடன் மோடி உரையாடல்!

இதற்கு முன்னதாக, அடிலெய்டு மைதானத்தில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் சர்பராஸ் அகமது 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காம இருந்தார். அதே போன்று இன்றைய போட்டியில் முகமது ரிஸ்வான் 131 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக பாகிஸ்தான் 49.2 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக பாகிஸ்தான் உலகக் கோப்பையில் 2ஆவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.

ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை விற்க முடிவு – சன் டிவி, கௌதம் அதானியிடம் பேச்சுவார்த்தை!

ஒரே போட்டியில் இரு அணியிலும் நம்பர் 4ல் களமிறங்கி சதம் அடித்த வீரர்கள்:

ஏபி டி வில்லியர்ஸ் (107) மற்றும் டடெண்டா தைபு (107) - ஹராரே, 2007

யுவராஜ் சிங் (150) மற்றும் இயான் மோர்கன் (102) - கட்டாக், 2017

ஷ்ரேயாஸ் ஐயர் (103) மற்று ராஸ் டெய்லர் (109*) - ஹாமில்டன், 2020

ஆரோன் ஜோன்ஸ் (123) மற்றும் கலம் மக்லியோட் (117), அபெர்டீன், 2022

சதீர சமரவிக்ரமா (108) மற்றும் முகமது ரிஸ்வான் (131*) - ஹைதராபாத், 2023*

முதல் இந்திய வீரராக விராட் கோலி 11,000 ரன்களை கடந்து சாதனை; ஒரே போட்டியில் சச்சினின் சாதனையும் முறியடிப்பு!

ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு அதிக ஸ்கோர்கள்:

160 - இம்ரான் நசீர் vs ஜிம்பாப்வே, கிங்ஸ்டன், 2007

131* - முகமது ரிஸ்வான் vs இலங்கை, ஹைதராபாத், 2023*

119* - ரமீஸ் ராஜா vs நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச், 1992

114 - அமர் சோஹைல் vs ஜிம்பாப்வே, ஹோபார்ட், 1992

விராட் கோலி பந்தை மேலே தூக்கி அடிக்கவுமே நான் நினைத்துவிட்டேன் – எனக்கு கால் வலிக்க ஆரம்பித்தது – அஸ்வின்!

உலகக் கோப்பையில் எந்த தோல்வியுமின்றி ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள்:

8 - பாகிஸ்தான் vs இலங்கை* (8 போட்டிகளில் விளையாடி 8 போட்டியிலும் வெற்றி)

7 - இந்தியா vs பாகிஸ்தான்

6 - வெஸ்ட் இண்டீஸ் vs ஜிம்பாப்வே

ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தது:

4 – பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா, லாகூர், 1998

4 - இந்தியா vs ஆஸ்திரேகியா, நாக்பூர், 2013

4 – பாகிஸ்தான் vs இலங்கை, ஹைதராபாத், 2023* (உலகக் கோப்பை)

உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்ற பாகிஸ்தான்:

345 - பாகிஸ்தான் vs இலங்கை, ஹைதராபாத், 2023*

328 - அயர்லாந்து vs இங்கிலாந்து, பெங்களூரு, 2011

322 - வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், டாண்டன், 2019

319 - வங்கதேசம் vs ஸ்காட்லாந்து, நெல்சன், 2015

313 - இலங்கை vs ஜிம்பாப்வே, புதிய பிளைமவுத், 1992

India vs Australia, KL Rahul: 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் தோனி சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்!

ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்களின் அதிகபட்ச ஸ்கோர்கள்:

131* - முகமது ரிஸ்வான் vs இலங்கை, ஹைதராபாத், 2023*

124 - கம்ரன் அக்மல் vs வெஸ்ட் இண்டீஸ், பிரிஸ்பேன், 2005

116* - கம்ரன் அக்மல் vs ஆஸ்திரேலியா, அபுதாபி, 2009

115 - முகமது ரிஸ்வான் vs ஆஸ்திரேலியா, ஷார்ஜா, 2019*

click me!