நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான 35ஆவது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்கள் குவித்தது. இதில், ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபீக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து, ஃபகர் ஜமான் மற்றும் பாபர் அசாம் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதில், ஃபகர் ஜமான் மட்டுமே பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி 63 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். குறைவான பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
Pakistan vs New Zealand: மழையால் ஓவர்கள் குறைப்பு – பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் வெற்றி இலக்கு!
ஒரே போட்டியில் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை ஃபகர் ஜமான் படைத்துள்ளார். இந்த நிலையில், தான் போட்டியின் போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தான் 21.3 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக பெய்த மழையின் காரணமாக 41 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. அதோடு, பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. அதன் பிறகு அதிரடியாக விளையாடிய ஃபகர் ஜமான் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசினார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 25.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி பார்க்கையில் பாகிஸ்தான் 22 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
மழை தொடர்ந்து மழை பெய்த நிலையில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து தோல்வி அடைந்ததன் மூலமாக தென் ஆப்பிரிக்கா 2ஆவது அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து தொடர்ந்து 4ஆவது இடத்தில் உள்ளது. புள்ளிகள் அடிப்படையில் பாகிஸ்தானுடன் ஒன்றாக இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
24 ஒரு நாள் இன்னிங்ஸ்களில் முதல் முறையாக விக்கெட்டே இல்லாமல் ஓவரை முடித்த ஷாகீன் அஃப்ரிடி!