மழையின் காரணமாக 41 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசுவாமி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.
இதில், ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபீக் 4 ரன்களில் டிம் சவுதி பந்தில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன், முழங்கால் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதுமட்டுமின்றி இடது கை கட்டைவிரலில் இந்த உலகக் கோப்பை போட்டியில் பலத்த காயம் அடைந்தார். அதோடு, இந்தப் போட்டியில் அவர் பீல்டிங்கில் நின்ற இடத்திலிருந்து 17 கிமீ தூரம் ஓடிச் சென்று அப்துல்லா ஷபீக் விக்கெட்டை கைப்பற்றினார்.
24 ஒரு நாள் இன்னிங்ஸ்களில் முதல் முறையாக விக்கெட்டே இல்லாமல் ஓவரை முடித்த ஷாகீன் அஃப்ரிடி!
இவரைத் தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார். ஃபகர் ஜமான் மற்றும் பாபர் அசாம் இருவரும் இணைந்து ரன்கள் குவித்தனர். இதில், ஜமான் அதிரடியாக விளையாடி குறைந்த பந்துகளில் சதம் விளாசினார். உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் உலகக் கோப்பையில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். ஜமான் 63 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் விளையாடிக் கொண்டிருந்த போது 21.3 ஓவர்களில் மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக பெய்த மழையின் காரணமாக 2ஆவது இன்னிங்ஸானது 41 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இதன் மூலமாக பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21.3 ஓவர்களில் பாகிஸ்தான் 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்னும் 19.3 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றி பெற 182 ரன்கள் எடுக்க வேண்டும்.