பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் போட்டியானது மழையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசுவாமி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.
24 ஒரு நாள் இன்னிங்ஸ்களில் முதல் முறையாக விக்கெட்டே இல்லாமல் ஓவரை முடித்த ஷாகீன் அஃப்ரிடி!
இதில், ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபீக் 4 ரன்களில் டிம் சவுதி பந்தில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன், முழங்கால் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதுமட்டுமின்றி இடது கை கட்டைவிரலில் இந்த உலகக் கோப்பை போட்டியில் பலத்த காயம் அடைந்தார். அதோடு, இந்தப் போட்டியில் அவர் பீல்டிங்கில் நின்ற இடத்திலிருந்து 17 கிமீ தூரம் ஓடிச் சென்று அப்துல்லா ஷபீக் விக்கெட்டை கைப்பற்றினார்.
இவரைத் தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார். ஃபகர் ஜமான் மற்றும் பாபர் அசாம் இருவரும் இணைந்து ரன்கள் குவித்தனர். இதில், ஜமான் அதிரடியாக விளையாடி குறைந்த பந்துகளில் சதம் விளாசினார். உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் உலகக் கோப்பையில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். ஜமான் 63 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
தற்போது வரையில் பாகிஸ்தான் 21.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்ட நிலையில், போட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது. டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் 10 ரன்கள் முன்னிலையில் உள்ளது. எனினும் மழை தூரம் போடும் நிலையில், போட்டி மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
CWC 2023: டெல்லியில் வீரர்களுக்கு இருமல் பாதிப்பு – பயிற்சியை ரத்து செய்த வங்கதேச அணி!