ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா பேட்டிங் விளையாடியதைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 3ஆவது லீக் போட்டி தற்போது பல்லேகலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு சுப்மன் கில் 10 ரன்னில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதையடுத்து இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இஷான் கிஷான் 82 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாஹீன் அஃப்ரிடி ஓவரில் ஹர்திக் பாண்டியா 87 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த பும்ரா 16 ரன்கள் எடுக்க இந்தியா 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி விளையாட இருந்தது. ஆனால், மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி பேட்டிங் ஆடிய போது 4.2 ஓவர்களில் மழை குறுக்கிட்டது. அதன் பிறகு, போட்டியின் 11.2ஆவது ஓவரிலும் மழை குறுக்கீடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிற்காமல் மழை பெய்து வரும் நிலையில், இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஓவர்கள் குறைக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு எளிய ஸ்கோர் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
KL Rahul: காட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மனைவியுடன் கேஎல் ராகுல் சாமி தரிசனம்!
- Bad news from Sri Lanka.
The whole ground is covered....!!! pic.twitter.com/uDeaqHchAv