பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 தொடரின் 3ஆவது லீக் போட்டியில் இந்தியா 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 3ஆவது லீக் போட்டியானது தற்போது இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா 11 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு சுப்மன் கில் 10 ரன்னில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதையடுத்து இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
KL Rahul: காட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மனைவியுடன் கேஎல் ராகுல் சாமி தரிசனம்!
இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஒரு புறம் இஷான் கிஷான் அரைசதம் அடிக்க, மறுபுறம் ஹர்திக் பாண்டியாவும் அரைசதம் அடித்தார். ஆனால், இருவருமே சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டனர். இஷான் கிஷான் 82 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாஹீன் அஃப்ரிடி ஓவரில் ஹர்திக் பாண்டியா 87 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Asia Cup 2023: மழை இந்தியாவிற்கு சாதகமா? பாதகமா? மழையால் மீண்டும் போட்டி நிறுத்தம்!
ஒரு கட்டத்தில் இந்திய அணி 204 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்திருந்த நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட் விழவே 242 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்தது. சிறந்த ஆல் ரவுண்டர் என்று அணியில் இடம் பெற்ற ஷர்துல் தாக்கூர் ஏமாற்றம் அளித்தார். அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசில வந்த பும்ரா தன் பங்கிற்கு 3 பவுண்டரி அடித்துக் கொடுக்க இந்தியா 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ஷாஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டும், ஹரீஷ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
India vs Pakistan: வெளியே, உள்ளே போட்டு ரோகித் சர்மாவை கிளீன் போல்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி!