
இலங்கை மற்றும் பாகிஸ்தான் நடத்தும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இலங்கையில் பல்லேகலே மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.
KL Rahul: காட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மனைவியுடன் கேஎல் ராகுல் சாமி தரிசனம்!
இதில், ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்த போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த விராட் கோலியும் 4 ரன்களில் அவரது ஓவரில் ஆட்டமிழிழந்தார். இவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து தடுமாறியது.
அதன் பிறகு சுப்மன் கில்லும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இஷான் கிஷான் 5ஆவது வரிசையில் களமிறங்கினார். இவருடன் ஹர்திக் பாண்டியா இணைந்தார். இருவரும் நிதானமாகவும், பவுண்டரியும் விளாசி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒரு கட்டத்தில் இஷான் கிஷான் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 4ஆவது பவுண்டரியை நிறைவு செய்தார்.
Asia Cup 2023: மழை இந்தியாவிற்கு சாதகமா? பாதகமா? மழையால் மீண்டும் போட்டி நிறுத்தம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி 3 அரைசதம் அடித்தார். தற்போது இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 54 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார். இதே போன்று ஹர்திக் பாண்டியாவும் தன் பங்கிற்கு அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.
இந்திய அணியின் ஸ்கோர் 204 ரன்களாக இருந்த போது இஷான் கிஷான் 82 ரன்களில் ஹரீஷ் ராஃப் பந்தில், பாபர் அசாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கி விளையாடி வருகிறார்.
India vs Pakistan: வெளியே, உள்ளே போட்டு ரோகித் சர்மாவை கிளீன் போல்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி!