பிரமாண்டமான உலகக் கோப்பை தொடக்க விழா பற்றிய செய்திகளுக்கு மாறாக, தொடக்க விழா நடைபெறாது என்று சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியான போது அட்டவணை மீதான விமர்சனம் எழுந்தது. அதன் பிறகு மைதானம் இங்கு நடக்கவில்லை, அங்கு மட்டுமே நடக்கிறது என்று குற்றச்சாட்டு, அடுத்து டிக்கெட் மோசடி என்று அடுத்தடுத்த நிகழ்வுகளால் இன்னும் ஓரிரு நாட்களில் உலகக் கோப்பை தொடங்க இருக்கிறது. சரி, எல்லாம் முடிந்து ஒரு வழியாக உலகக் கோப்பை தொடக்க விழாவுடன் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி உலகக் கோப்பைக்கான தொடக்க விழா இல்லை என்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Asian Games 2023, India vs Nepal: சுரேஷ் ரெய்னா, சுப்மன் கில் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
நாளை அகமதாபாத் மைதானத்தில் தொடக்க விழாவிற்கு திட்டமிட்டுள்ளதாகவும், தொடக்க விழாவில் ஆஷா போஸ்லே, ரன்வீர் சிங், தமன்னா பாட்டியா, ஸ்ரேயா கோஷல், ஷங்கர் மகாதேவன் மற்றும் அரிஜித் சிங் போன்ற நட்சத்திரங்களை இறுதி செய்ததாகவும் தகவல் வெளியானது. தமிழ் ஏசியாநெட் நியூஸ் வெப்சைட்டில் கூட இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது புதிதாக தொடக்க விழா ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
India vs Nepal, Quarter Final 1: நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
நாளை அக்டோபர் 4 ஆம் தேதி கேப்டன்ஸ் டே என்று சொல்லப்படும் நாளன்று கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும். அதைத் தொடர்ந்து லேசர் ஷோ நடக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. ஆனால், தொடக்க விழாவிற்குப் பதிலாக, நவம்பர் 19 ஆம் தேதி நிறைவு விழா அல்லது அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக ஒரு பிரமாண்ட விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Hangzhou 2023: கேனோ இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா – 62 பதக்கங்களுடன் 4ஆவது இடம்!
இதற்கு முன்னதாக உலகக் கோப்பை தொடக்க விழாவிற்காக மைதானம் தயார் நிலையில் இருப்பதாகவும், கலை நிகழ்ச்சிக்காக ஒத்திகை மேடை அமைக்கப்பட்டு ஒத்திகையும் நடைபெற்றதாக கூறப்பட்டது. உலகக் கோப்பைக்கு முன்னதாக 10 அணிகளின் கேப்டன்களும் இன்று அகமதாபாத் மைதானத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது தொடக்க விழா இல்லாத நிலையில், நாளை அனைத்து அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.