ஆசிய விளையாட்டில் நேபாள் அணிக்கு எதிரான முதல் காலிறுதிப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்ததன் மூலமாக சுரேஷ் ரெய்னா மற்றும் சுப்மன் கில் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி மகளிர் அணி தங்கம் கைப்பற்றிய நிலையில், தற்போது ஆண்களுக்கான டி20 போட்டி நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த முதல் காலிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
India vs Nepal, Quarter Final 1: நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
இதில், ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வந்தார். தொடர்ந்து சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார். இறுதியாக டி20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலமாக இளம் வயதில் டி20 போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதோடு, இதற்கு முன்னதாக இளம் வயதில் டி20 போட்டியில் சதம் அடித்த சுரேஷ் ரெய்னா மற்றும் சுப்மன் கில் சாதனையை முறியடித்துள்ளார்.
Hangzhou 2023: கேனோ இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா – 62 பதக்கங்களுடன் 4ஆவது இடம்!
சுரேஷ் ரெய்னா 23 வயது 156 நாட்களில் டி20 போட்டியில் முதல் சதம் அடித்தார். ஆனால், சுப்மன் கில் 23 வயது 146 நாட்களில் சதம் அடித்து அவரது சாதனையை முறியடித்தார். இந்த நிலையில், தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 வயது 279 நாட்களில் டி20 போட்டியில் சதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். அதோடு மட்டுமின்றி டி20 போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார்.
ரோகித் சர்மா – 35 பந்துகள்
சூர்யகுமார் யாதவ் – 45 பந்துகள்
கேஎல் ராகுல் – 46 பந்துகள்
சூர்யகுமார் யாதவ் – 48 பந்துகள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 48 பந்துகள்
சூர்யகுமார் யாதவ் – 49 பந்துகள்