India vs Netherlands Warm Up Match: திருவனந்தபுரத்தில் மழை: இந்தியா – நெதர்லாந்து போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு!

Published : Oct 03, 2023, 11:13 AM IST
India vs Netherlands Warm Up Match: திருவனந்தபுரத்தில் மழை: இந்தியா – நெதர்லாந்து போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு!

சுருக்கம்

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 9ஆவது வார்ம் அப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 2 வார்ம் அப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. கடந்த 29 ஆம் தேதி தொடங்கிய வார்ம் அப் போட்டியானது இன்றுடன் முடிவடைகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

India vs Nepal:முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி: தேசிய கீதம் பாடும் போது ஆனந்த கண்ணீர் வடித்த சாய் கிஷோர்!

நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 7ஆவது வார்ம் அப் போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று கவுகாத்தி மைதானத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான 8ஆவது வார்ம் அப் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs NEP:ருத்ரதாண்டவம் ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் சதம் அடித்து சாதனை–டி20யில் இந்தியா 202 ரன்கள் குவிப்பு!

இந்த நிலையில், கவுகாத்தி மைதானத்தில் 8ஆவது வார்ம் அப் போட்டியும், திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 9ஆவது வார்ம் அப் போட்டியும், ஹைதராபாத் மைதானத்தில் 10ஆவது வார்ம் அப் போட்டியும் நடத்தப்படுகிறது. ஏற்கனவே திருவனந்தபுரத்தில் மழை பெய்து வரும் நிலையில் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், மழையின் காரணமாக டக் ஒர்த் லீவிஸ் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் பெருமைகொள்கிறது.. 50 ஆண்டுகள் கழித்து முதல் தங்கம் - ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்திய சாந்தி!

அப்படியிருக்கும் போது இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கப்பட்டால் போட்டியின் நடுவில் மழையின் குறுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக கவுகாத்தி மைதானத்தில் நடக்க இருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது வார்ம் அப் போட்டியானது டாஸ் போடப்பட்ட நிலையில், மழையால் ரத்து செய்யப்பட்டது. இதே போன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 2ஆவது வார்ம் அப் போட்டியானது டாஸ் போடப்படாமலே ரத்து செய்யப்பட்டது. மேலும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து இடையிலான 5ஆவது வார்ம் அப் போட்டியில் மழையால் முடிவு எட்டப்படவில்லை.

Cricket World Cup 2023: உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் ரோகித் சர்மா!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!