ஐபிஎல் 2023 மூலமாக நீதா, முகேஷ் அம்பானிக்கு கிடைத்த வருமானம் ரூ.100 கோடி!

By Rsiva kumarFirst Published May 28, 2023, 4:53 PM IST
Highlights

ஐபிஎல் 16ஆவது சீசன் மூலமாக நீதா மற்றும் முகேஷ் அம்பானிக்கு ரூ.100 கோடி வரையில் வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முதலாக ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 16ஆவது ஐபிஎல் சீசனின் 70 லீக் போட்டிகள் முடிந்து குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை என்று 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் சாதனை படைப்பாரா தோனி?

இதில், முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதே போன்று எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 2ஆவது குவாலிஃபையர் போட்டிக்கு முன்னேறியது. இதில், குஜராத் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது.

IPL 2023 Final CSK VS GT: சென்னையா? குஜராத்தா? எந்த அணி வெற்றி பெறும்?

அதன்படி, இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்கிறது. இந்த நிலையில், இந்த ஐபிஎல் சீசன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ரூ.100 கோடி வரையில் சம்பாதித்துள்ளனர்.

IPL 2023 Final CSK VS GT: ஐபிஎல் 2023 ஃபைனல்: நீயானா, நானா போட்டியில் சென்னை vs குஜராத்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் 100 சதவிகித பங்குகளை நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி வைத்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியை வாங்க அவர்கள் மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளனர். அதாவது, ஜிக்யூ (GQ) அறிக்கையின்படி முதல் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை வாங்க முகேஷ் அம்பானி ரூ. 916 கோடி செலவு செய்துள்ளார்.

IPL 2023 Final CSK VS GT: மீண்டும் அதே மைதானம்: 2ஆவது முறையாக சாம்பியனாகுமா குஜராத்?

இதுவரையில் நடந்த ஐபிஎல் சீசனில்களில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. அதுமட்டுமின்றி அதிக ஸ்பான்ஸர்களையும் கொண்ட அணியாக மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. அதிக லாபம் ஈட்டும் ஐபிஎல் அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது. தி ட்ரிப்யூன் கருத்துப்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பு மட்டும் ரூ.10,070 கோடிக்கு மேல் உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.200 கோடி வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2011ல் இதே நாளில் பெங்களூருவை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!

வணிகப் பொருட்கள், டிக்கெட், ஊடக ஸ்பான்சர்ஷிப் மற்றும் விளம்பரம் மூலமாக வரும் வருமானத்தைவிட ஜியோ சினிமாவிற்கு விற்பகப்பட்ட ஐபிஎல் மூலமாக முகேஷ் மற்றும் நீதா அம்பானி ஆகியோர் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். இது தவிர, நீடா மற்றும் முகேஷ் அம்பானி வணிகப் பொருட்கள் மற்றும் டிக்கெட் விலைகள் மற்றும் ஊடக ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். இது தவிர, அம்பானி குடும்பத்தின் மற்றொரு முக்கிய வருமானம் ஜியோ சினிமாவுக்கு விற்கப்பட்ட ஐபிஎல் உரிமையாகும்.

WTC Final: திருமணம் காரணமாக விலகிய ருத்துராஜ் கெய்க்வாட்: Standby பிளேயராக இடம் பிடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலிருந்து ஐபிஎல் உரிமை நீக்கப்பட்டது. மேலும் ரிலையன்ஸின் பிராண்டான வையாகாம்18 ஜியோ சினிமாவுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ரூ.22,290 கோடிக்கு வாங்கியது. இருப்பினும், ஜியோ சினிமா ஐபிஎல் ஹோஸ்டிங் மூலம் ரூ. 23,000 கோடி மதிப்பிலான வருவாயை ஈட்டியது. இன்னும் சில ஆண்டுகளுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டும் என்பது குறிப்பிடத்தக்கது

click me!