இந்தியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்று வெற்றி பெற்றி தொடரில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று இரவு டிரினிடாட் மைதானத்தில் நடக்கிறது.
லங்கா பிரீமியர் லீக்: மைதானத்திற்கு வந்த 6 அடி நீளமுள்ள பாம்பை வெளியேற்றிய நடுவர்கள்!
இதையடுத்து வரும் 3ஆம் தேதி நாளை மறுநாள் முதல் 5 டி20 போட்டிகள் கொண்ட ஆரம்பமாகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அமெரிக்காவில் நடந்த மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் எம்.ஐ. நியூயார்க் அணியில் இடம் பெற்று இறுதிப் போட்டியில் 55 பந்துகளில் 137 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் 13 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகளும் உள்பட 137 ரன்கள் எடுத்தார்.
Eng vs Aus 5th Test: போராடி தோற்ற ஆஸ்திரேலியா: தொடரை 2-2 என்று சமன் செய்த இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி வீர்ரகள்:
ரோவ்மேன் பவல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் (துணை கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சாஸ், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹூசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், ஓபேட் மெக்காய், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், ஓஷேன் தாமஸ்.
இந்தியா டி20 வீரர்கள்:
இஷான் கிஷான், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல்,குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.
தோனியின் முதலீட்டு நிறுவனங்கள்: ட்ரோன், கதாபுக், 7 இங்க் ப்ரீவ்ஸ், ஸ்போர்ட்ஸ்ஃபிட்!