ICC ODI Ranking: தொடரும் போச்சு, ஐசிசி நம்பர் 1 இடமும் போச்சு: தவிக்கும் நியூசிலாந்து!

By Rsiva kumarFirst Published Jan 22, 2023, 10:36 AM IST
Highlights

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்து தரவரிசை பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளது.
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல்கட்டமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஹைதராபாத் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைக் கண்டது. இதன் மூலம் 2 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

நம்ப வச்சு ஏமாத்திய நண்பன்: நிலம் வாங்கித் தருவதாக கூறிய நண்பனிடம் ரூ.44 லட்சம் ஏமாந்த உமேஷ் யாதவ்

இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் 2ஆவது ஒரு நாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ரோகித் சர்மா என்ன கேட்க வேண்டும் என்பதை மறந்து தவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து பௌலிங் தேர்வு செய்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ராய்ப்பூர் மைதானத்தில் மோதும் முதல் போட்டி என்பதால், இந்த மைதானம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரிந்திருக்காத ஒரு இக்கட்டான நிலையில், டாஸ் இந்தியாவிற்கு சாதகமானது.

ராய்ப்பூரில் நடு ஹோட்டலில் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய விராட் கோலி, சிராஜ்!

இதையடுத்து, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி தட்டி தடுமாறி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்தது. கடந்த போட்டியில் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்த பிரேஸ்வெல் இந்தப் போட்டியில் 22 ரன்களில் வெளியேறினார். அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 36 ரன்கள் எடுத்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், தாக்கூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

IND vs NZ 2nd ODI: ராய்ப்பூரில் மண்ணைக் கவ்விய நியூசிலாந்து: இந்தியா வெற்றி: 2-0 என்று தொடரையும் கைப்பற்றியது!

பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். அவர் 50 பந்துகளில் 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 11 ரன்களில் வெளியேற, சுப்மன் கில் வெற்றிக்கு தேவைப்பட்ட 2 ரன்களை பவுண்டரி அடித்து எடுத்துக் கொடுக்க இந்தியா 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இஷான் கிஷான் 8 ரன்னும், சுப்மன் கில் 40 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். 2ஆவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதோடு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

எங்கிருந்தோ ஓடி வந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்த சிறுவன்: அலேக்காக தூக்கிச் சென்ற பாதுகாவலர்!

இந்த நிலையில், ஐசிசி ஒரு நாள் போட்டியில் நம்பர் இடம் பிடித்திருந்த நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என்று இழந்ததன் மூலமாக ஐசிசி தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து 3ஆம் இடம் பிடித்துள்ளது. 28 போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து 3166 புள்ளிகள் பெற்று 113 ரேட்டிங்கில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே 2ஆவது இடத்தில் இருந்த இங்கிலாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 43 போட்டிகளில் விளையாடி 4847 புள்ளிகள் பெற்று 113 ரேட்டிங் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மகளின் திருமணம்- வீட்டை அலங்கரித்த சுனில் ஷெட்டி: கண்டாலாவில் நடக்கும் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்!

click me!