WI vs NZ: ஃபின் ஆலன் அபார பேட்டிங்.. 2வது ODI-யில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

By karthikeyan VFirst Published Aug 20, 2022, 3:07 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது.
 

நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது.  டி20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என வென்ற நிலையில், அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி ஜமைக்காவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - என்னை ஓபனிங்கில் இறக்க சொல்லி கங்குலியிடம் பரிந்துரைத்தது அந்த வீரர் தான்..! சேவாக் ஓபன் டாக்

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ஒருமுனையில் நிலைத்து ஆடிய ஃபின் ஆலன் அரைசதம் அடித்தார். கப்டில் (3), கான்வே(6), லேதம்(0) ஆகியோர் சொதப்பினாலும், 4வது விக்கெட்டுக்கு ஃபின் ஆலனுடன் ஜோடி சேர்ந்த டேரைல் மிட்செல் பொறுப்புடன் பேட்டிங் ஆடி 41 ரன்கள் அடித்தார்.

அபாரமாக பேட்டிங் ஆடிய ஃபின் ஆலன் 96 ரன்களை குவித்த நிலையில், 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் சாண்ட்னெர் 26 ரன்களும், டிரெண்ட் போல்ட் 16 ரன்களும் அடிக்க, 49வது ஓவரில் 212 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி.

மழையால் 2வது இன்னிங்ஸ் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு 212 டி.எல்.எஸ் முறைப்படி 212 ரன்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 41 ஓவர்களில் 212 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 72 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

இதையும் படிங்க - கங்குலியின் விலா எலும்பை உடைக்க சொல்லி டீம் மீட்டிங்கில் சொன்னாங்க.. நானும் உடைத்தேன் - அக்தர் ஃப்ளாஷ்பேக்

டெயிலெண்டர்களான யானிக் காரியா மற்றும் அல்ஸாரி ஜோசஃப் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். யானிக் அரைசதம் அடித்து 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அல்ஸாரி ஜோசஃப் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். இந்த 2 டெயிலெண்டர்களை போல, பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் ஆடியிருந்தால், இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 35.3 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 1-1 என நியூசிலாந்து ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் ஜெயிக்கும் அணி தொடரை வெல்லும்.
 

click me!