ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக பிடித்த தென்னாப்பிரிக்கா! பரிதாப இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Aug 19, 2022, 9:35 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பின், 75 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது.
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் சதவிகிதங்கள் அடிப்படையில் அணிகள் புள்ளி பட்டியலில் வரிசைப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், அதிக வெற்றிகளை பெறும் அணிகளால் தான், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும்.

இதையும் படிங்க - ENG vs SA: 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்  ஃபைனலில் ஆடிய இந்தியாவும் நியூசிலாந்தும் இம்முறை பின் தங்கியுள்ளன. இம்முறை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 71.43 சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பின் 75 சதவிகிதத்துடன் முதலிடத்தை வலுவாக பிடித்துள்ளது.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் அபாரமாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க - நீங்க பண்றது எல்லாமே தப்புதான்! பிறகு எப்படி ஃபார்முக்கு வருவது? கோலியை செமயா விமர்சித்த பாக்., முன்னாள் வீரர்

இந்த வெற்றியின் மூலம் 75 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 70 சதவிகிதத்துடன் 2ம் இடத்திலும் உள்ளன.

இலங்கை அணி 3ம் இடத்திலும், இந்திய அணி 4ம் இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணி 5ம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 31.37 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில், அதாவது கடைசியிலிருந்து 3வது இடத்தில் உள்ளது.
 

click me!