ENG vs SA: 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Aug 19, 2022, 8:55 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 17ம் தேதி லண்டன் லார்ட்ஸில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் ஆலி போப்பை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஆலி போப் 73 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடாமல் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க - நீங்க பண்றது எல்லாமே தப்புதான்! பிறகு எப்படி ஃபார்முக்கு வருவது? கோலியை செமயா விமர்சித்த பாக்., முன்னாள் வீரர்

தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளும், நோர்க்யா 3 விக்கெட்டுகளும், மார்கோ யான்சென் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க வீரர்கள் இங்கிலாந்து அணியின் பவுலிங்கை கவனமுடன் எதிர்கொண்டு சிறப்பாக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர்கள் எல்கர் - எர்வீ இணைந்து முதல் விக்கெட்டுக்கு 85 ரன்களை குவித்தனர். எல்கர் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபாரமாக பேட்டிங் ஆடிய எர்வீ 73 ரன்களை குவித்தார்.

மார்கோ யான்சென் (48), மஹராஜ் (41), நோர்க்யா(28) ஆகிய பவுலர்களும் நல்ல பங்களிப்பை செய்ய, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 161 ரன்கள் முன்னிலை பெற்றது.

161 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள், இந்த இன்னிங்ஸிலும் படுமட்டமாக பேட்டிங் ஆடினர். தென்னாப்பிரிக்க அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இந்த இன்னிங்ஸிலும் விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். 

இதையும் படிங்க - கங்குலியின் விலா எலும்பை உடைக்க சொல்லி டீம் மீட்டிங்கில் சொன்னாங்க.. நானும் உடைத்தேன் - அக்தர் ஃப்ளாஷ்பேக்

தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் 35 ரன்களும் ஜாக் க்ராவ்லி 13 ரன்களும் அடித்தனர். ஜானி பேர்ஸ்டோ 18 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களும், ஸ்டூவர்ட் பிராட் 35 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 2வது இன்னிங்ஸில் வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!