நீங்க பண்றது எல்லாமே தப்புதான்! பிறகு எப்படி ஃபார்முக்கு வருவது? கோலியை செமயா விமர்சித்த பாக்., முன்னாள் வீரர்

By karthikeyan V  |  First Published Aug 19, 2022, 7:10 PM IST

விராட் கோலி இந்திய அணிக்காக அனைத்து போட்டிகளிலும் ஆடாமல் அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பதே அவர் ஃபார்முக்கு வரமுடியாததற்கு காரணம் என்று டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.
 


சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், சுமார் கடந்த 3 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை குவித்துள்ள விராட் கோலி, 3 ஆண்டுகளாக 71வது சதம் அடிக்க முடியாமல் திணறிவருகிறார். கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் இன்று வரை சதமடிக்கவில்லை. இன்றுடன் அவர் சதமடித்து 1000 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. 1000 நாட்களாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை கோலி.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - ZIM vs IND: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! என்னென்ன மாற்றங்கள்..?

ஃபார்மில் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக இந்திய அணியில் ஆடிக்கொண்டே இருந்தால் தான் ஃபார்முக்கு வரமுடியும். ஆனால் கோலி அதிகமாக ஓய்வெடுக்கிறார். ஐபிஎல்லுக்கு பின் இங்கிலாந்து தொடரில் மட்டுமே ஆடியிருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய தொடர்களை புறக்கணித்திருக்கிறார். இந்த தொடர்களில் ஆடியிருந்தால் அவர் ஃபார்முக்கு வந்திருக்கலாம். இந்திய அணியில் ஏகப்பட்ட இளம் திறமையான வீரர்கள் வரிசைகட்டி நின்றாலும், விராட் கோலி தான் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் இந்தியாவிற்காக 3ம் வரிசையில் ஆடவுள்ளார்.

எனவே இந்த பெரிய தொடர்களுக்கு முன்பாக அவர் ஃபார்முக்கு வருவது அவசியம். ஆனால் அவரோ அளவுக்கு அதிகமாக ஓய்வெடுத்துவருகிறார்.

இதையும் படிங்க - கங்குலியின் விலா எலும்பை உடைக்க சொல்லி டீம் மீட்டிங்கில் சொன்னாங்க.. நானும் உடைத்தேன் - அக்தர் ஃப்ளாஷ்பேக்

இந்நிலையில், விராட் கோலி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, விராட் கோலி நீண்டகாலமாக கஷ்டப்பட்டுவருகிறார். 3 ஆண்டுகளாக திணறிவருகிறார். 2021 டி20 உலக கோப்பைக்கு பின், பிசிசிஐ-யுடனான மோதல், மீடியாக்களில் வெளிவந்த ஸ்டேட்மெண்ட்டுகள் என அதிகமான நெகட்டிவ் விஷயங்கள் நடந்துவிட்டன. அதனால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. அவர் இன்னும் சில ஆண்டுகள் ஆடவேண்டும் என்று விரும்பினால் நன்றாக  பேட்டிங் ஆடவேண்டும். 

அவர் நிறைய போட்டிகளில் ஆடாமல் ஓய்வெடுப்பதால், மேட்ச் பிராக்டிஸ் இல்லாதது ஆசிய கோப்பையில் அவர் ஆட்டத்தை பாதிக்கும். ஆசிய கோப்பையிலும் அவர் திணறக்கூடும். ஐபிஎல்லுக்கு பிறகு,இங்கிலாந்து தொடரை தவிர வேறு எதிலும் ஆடவில்லை. அவர் ஃபார்முக்கு வரவேண்டும் என்றால், நிறைய போட்டிகளில் ஆடவேண்டும். ஆனால் அவரோ அதிகமாக ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார் என்று டேனிஷ் கனேரியா விளாசினார்.
 

click me!