மளமளவென்று சரிந்த விக்கெட் - இன்னிங்ஸ் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!

By Rsiva kumar  |  First Published Mar 20, 2023, 2:20 PM IST

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 58 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
 


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கடைசி பந்தில் தனது த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 17 ஆம் தேதி வெல்லிங்டனில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.

இந்திய தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்; சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

Tap to resize

Latest Videos

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில், கேன் வில்லியம்சன் (215) மற்றும் ஹென்றி நிக்கோலஸ் (200 ரன்கள் நாட் அவுட்) இருவரும் இரட்டை சதம் விளாசினர். இதையடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து ஃபாலோ ஆன் பெற்று 2ஆவது இன்னிங்ஸையும் இலங்கை அணி ஆடியது. 

கொரோனா இல்லைனாலும் ஐபிஎல் ரூல்ஸாக இதை பாலோ பண்ண வேண்டும் - ஐபிஎல் மருத்துவ குழு!

இதில் ஒசாடா பெர்னாண்டோ 5 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் திமுத் கருணாரத்னே 51 ரன்களிலும், குசால் மெந்திஸ் 50 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் வந்த மேத்யூஸ் 2 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து, தினேஷ் சண்டிமால் மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடினர். ஒரு கட்டத்தில் தினேஷ் சண்டிமால் 62 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த நிசான் மதுஷ்கா 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Major League Cricket: 5ஆவது அணியின் உரிமையை வாங்கிய மும்பை இந்தியனஸ்: என்ன அணி? எப்போது போட்டி தெரியுமா?

ஒரு கட்டத்தில் நிலையாக நின்று ஆடிய டி சில்வா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 98 ரன்களில் வெளியேறினார். இறுதியாக இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் மட்டுமே எடுத்து 58 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக நியூசிலாந்து இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. இந்தப் போட்டியில் ஹென்றி நிக்கோலஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் விருது பெற்றார். இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வரும் 25 ஆம் தேதி ஆக்லாந்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்திக் பாண்டியாவை பார்த்து ‘போடா டேய்’னு சொன்ன ரவீந்திர ஜடேஜா - வைரலாகும் வீடியோ!

click me!