கத்தார் நாட்டில் நடந்து வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி இந்திய நாட்டு தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரில் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் டி20 தொடர் நடந்து வருகிறது. ஆசிய லயன்ஸ், இந்திய மகாராஜா மற்றும் வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் என்று மொத்தம் 3 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இதில், ஆசிய லயன்ஸ் அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி கேப்டனாக உள்ளார். 4 போட்டிகளில் விளையாடிய ஆசிய லயன்ஸ் அணி 2 போட்டியில் வெற்றியும், 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.
கொரோனா இல்லைனாலும் ஐபிஎல் ரூல்ஸாக இதை பாலோ பண்ண வேண்டும் - ஐபிஎல் மருத்துவ குழு!
இந்த தொடரில் இந்திய மகாராஜா அணி தோல்வி அடைந்த் தொடரிலிருந்து வெளியேறியது. இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் ஆசிய லயன்ஸ் அணியும், வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணிக்கு ஷேன் வாட்சன் கேப்டனாக உள்ளார். கடந்த 18 ஆம் தேதி இந்திய மகாராஜா அணிக்கும், வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையில் போட்டி நடந்தது. இதில், முதலில் ஆடிய ஆசிய லயன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக, இலங்கை வீரர் உபுல் தரங்கா 50 ரன்கள் எடுத்தார்.
இந்திய மகாராஜா அணி சார்பில் ஸ்டூவர்ட் பின்னி மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பிரவீன் தம்பே ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய மகாராஜா அணி களமிறங்கியது. கௌதம் காம்பீர் கேப்டனாக இருந்த இந்த அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளா இந்திய மகாராஜா அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், 3 போட்டியில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இந்த தொடரிலிருந்து வெளியேறியது.
ஹர்திக் பாண்டியாவை பார்த்து ‘போடா டேய்’னு சொன்ன ரவீந்திர ஜடேஜா - வைரலாகும் வீடியோ!
இந்த நிலையில், இந்திய நாட்டு தேசியக் கொடியில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி (அஃப்டிதி) தனது ஆட்டோகிராஃப் போட்டுள்ளார். இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் அப்ரிடியின் இந்த அழகான செய்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். இருப்பினும், இது நடத்தை நெறிமுறைக்கு எதிரானது என்று உணர்ந்து அவரைப் படிக்காதவர் என்று அழைத்தனர். இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் உள்ளது. எப்போதும் பகை நிலவும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனின் இந்த செயல் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.
𝑩𝑰𝑮 𝑴𝑨𝑵 𝑾𝑰𝑻𝑯 𝑨 𝑩𝑰𝑮 𝑯𝑬𝑨𝑹𝑻 😍
Shahid Afridi gives an autograph to a fan on the Indian flag 🙌 pic.twitter.com/LonnLwlDAt