Major League Cricket: 5ஆவது அணியின் உரிமையை வாங்கிய மும்பை இந்தியனஸ்: என்ன அணி? எப்போது போட்டி தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Mar 20, 2023, 10:17 AM IST

மும்பை இந்தியன்ஸ், மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் வரிசையில் தற்போது 5ஆவது அணியாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை ரிலைன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
 


நாளுக்கு நாள் கிரிக்கெட் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. அதிலும், அதிரடியாக ஆடக் கூடிய டி20 போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிகளவில் வருவாய் ஈட்டக்கூடிய போட்டியாக இந்த டி20 போட்டி திகழ்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ மூலமாக ஐபிஎல் தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொடரில் ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மும்பை இந்தியன்ஸ் அணியை அறிமுகம் செய்தது. அதே போன்று, தென் ஆப்பிரிக்கா 20 (எஸ்ஏ20) தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் என்றும், ஐஎல்டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் என்றும், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி என்றும் ரிலைன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு அணியாக அறிமுகம் செய்தது.

ஹர்திக் பாண்டியாவை பார்த்து ‘போடா டேய்’னு சொன்ன ரவீந்திர ஜடேஜா - வைரலாகும் வீடியோ!

Tap to resize

Latest Videos

அந்த வரிசையில் தற்போது கோடையில் நடக்க இருக்கும் மேஜர் கிரிக்கெட் லீக் 2023 தொடரில் ரிலைன்ஸ் நிறுவனம், தங்களது 5ஆவது அணியாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் என்ற அணியின் உரிமத்தை வாங்கியுள்ளது. அமெரிக்காவில் நடக்கவுள்ள டி20 மேஜர் கிரிக்கெ லீக் தொடரின் தொடக்க விழாவில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி பங்கேற்கிறது.

2 போட்டியிலும் கோல்டன் டக்: வாய்ப்பை கோட்டை விட்ட சூர்யகுமார் யாதவ்: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி கூறுகையில், வளர்ந்து வரும் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கு மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவின் முதல் கிரிக்கெட் லீக்கில் நுழைந்ததன் மூலம், அச்சமற்ற மற்றும் பொழுதுபோக்கு கிரிக்கெட்டின் உலகளாவிய பிராண்டாக மும்பை இந்தியன்ஸை நிறுவ முடியும் என்று நம்புகிறேன். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மற்றொரு புதிய தொடக்கமாகும். மேலும் இந்த லீக்கின் மூலம் முன்னோக்கிச் செல்லும் அற்புதமான பயணத்தை எதிர்நோக்குகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 வருடங்களுக்கு பிறகு டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்த இந்தியா!

click me!