ஒருநாள் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா அபார சாதனை..! சச்சின், கபில் தேவுடன் இணைந்தார் ஜடேஜா

By karthikeyan VFirst Published Mar 19, 2023, 11:34 PM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோரின் வரிசையில் ரவீந்திர ஜடேஜா 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
 

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. அதிரடி பேட்டிங், அபாரமான ஃபீல்டிங், அசாத்தியமான ஃபீல்டிங் என அனைத்துவகயிலும் மிகச்சிறந்த பங்களிப்பை செய்யக்கூடியவர்.

இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னரான ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான அணியிலும் அணியின் பேலன்ஸுக்கு வலுசேர்ப்பவர் ஜடேஜா.

சச்சின், சேவாக், யுவராஜ் மாதிரி பிளேயர் அந்த பையன்..! உலக கோப்பையில் அவன் கண்டிப்பா ஆடணும்.. ரெய்னா அதிரடி

சர்வதேச கிரிக்கெட்டில் 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2658 ரன்களை குவித்துள்ளார்; 264 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டி20-யில் 64 போட்டிகளில் ஆடி 457 ரன்கள் அடித்துள்ளார்; 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 117 ரன்கள் மட்டுமே அடித்தது. 118 ரன்கள் என்ற இலக்கை 11 ஓவரில் அடித்து ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 16 ரன்கள் அடித்த ஜடேஜா, ஒருநாள் கிரிக்கெட்டில் 2500 (2508) ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில்  191 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2500 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் மலிங்காவின் சாதனையை முறியடித்து முரளிதரன் சாதனையை விரட்டும் மிட்செல் ஸ்டார்க்

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் (18428 ரன்கள் & 154 விக்கெட்டுகள்) மற்றும் கபில் தேவ் (3783 ரன்கள் & 253 விக்கெட்டுகள்) ஆகிய இருவரும் இந்த மைல்கல்லை எட்டி முதலிரண்டு இடங்களில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜடேஜா.
 

 

click me!