டி20 உலக கோப்பை: கேன் வில்லியம்சன் அபார பேட்டிங்.. அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து

By karthikeyan V  |  First Published Nov 4, 2022, 2:14 PM IST

டி20 உலக கோப்பையில் அயர்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
 


டி20 உலக கோப்ப சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1ல் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.

அடிலெய்டில் நடந்த நியூசிலாந்து - அயர்லாந்து இடையேயான போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

Latest Videos

undefined

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன் (விக்கெட் கீப்பர்), டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன்.

சுவாரஸ்யமான கட்டத்தில் டி20 உலக கோப்பை..! எந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்..? ஓர் அலசல்

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர் ஃபின் ஆலன் அதிரடியாக பேட்டிங் ஆடி 18 பந்தில் 32 ரன்கள் அடித்தார். டெவான் கான்வே மந்தமாக ஆடி 33 பந்தில் 28 ரன் மட்டுமே அடித்தார். இதுவரை ஃபார்மில் இல்லாமல் இருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய வில்லியம்சன், 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் அடித்தார். டேரைல் மிட்செல் 21 பந்தில் 31 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 185 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

186 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டர்லிங் (37) மற்றும் பால்பிர்னி (30) ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அவர்கள் ஆட்டமிழந்தபின்னர் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே அடித்தது அயர்லாந்து அணி.

IND vs ZIM: இந்தியாவை தோற்கடிங்க.. ஜிம்பாப்வே பையனை திருமணம் பண்ணிக்கிறேன்.. பாகிஸ்தான் நடிகை கொடுத்த ஆஃபர்

35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி நியூசிலாந்து ஆகும். க்ரூப் 1ல் 2வது இடத்தை பிடிக்க ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 

click me!