AUS vs AFG: வாழ்வா சாவா போட்டியில் ஆஸி., அணியில் தாறுமாறான மாற்றங்கள்..! டாஸ் வென்றது ஆஃப்கான் அணி

டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

afghanistan win toss opt to field against australia in t20 world cup

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சுவாரஸ்யமான கட்டத்தில் உலக கோப்பை தொடர் உள்ளது. 

க்ரூப் 1ல் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு அணிகளுமே 4 போட்டிகளின் முடிவில் தலா 5 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணியின் நெட் ரன்ரேட் ஆஸ்திரேலியாவை விட மிக சிறப்பாக உள்ளது.

Latest Videos

சுவாரஸ்யமான கட்டத்தில் டி20 உலக கோப்பை..! எந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்..? ஓர் அலசல்

ஆஸ்திரேலிய அணி வெற்றி கட்டாயத்தில், அதுவும் பெரிய வெற்றி கட்டாயத்தில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஆஸி., ஜெயித்து, இங்கிலாந்து அடுத்த போட்டியில் இலங்கையிடம் தோற்றால் ஆஸி., அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இங்கிலாந்தும் ஜெயித்தால் நெட்ரன்ரேட்டின் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி கட்டாயத்தில் களமிறங்குகிறது ஆஸ்திரேலிய அணி. அடிலெய்டில் நடக்கும் இந்த முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆடவில்லை. எனவே மேத்யூ வேட் கேப்டன்சி செய்கிறார்.  ஃபின்ச்சுக்கு பதிலாக அதிரடி தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் ஆடுகிறார். மேலும் டிம் டேவிட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆடுகின்றனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர்,  கேமரூன் க்ரீன், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

IND vs ZIM: இந்தியாவை தோற்கடிங்க.. ஜிம்பாப்வே பையனை திருமணம் பண்ணிக்கிறேன்.. பாகிஸ்தான் நடிகை கொடுத்த ஆஃபர்

ஆஃப்கானிஸ்தான் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கனி, இப்ராஹிம் ஜட்ரான், குல்பாதின் நைப், தன்விஷ் ரசூலி, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image