சுவாரஸ்யமான கட்டத்தில் டி20 உலக கோப்பை..! எந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்..? ஓர் அலசல்

By karthikeyan V  |  First Published Nov 3, 2022, 9:17 PM IST

டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் நிலையில், எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று பார்ப்போம்.
 


டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2 ஆகிய இரண்டிலுமே தலா 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு க்ரூப்களிலிருந்தும் தலா 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும். 

க்ரூப் 1ல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தலா 4 போட்டிகளில் ஆடி தலா 5 புள்ளிகளை பெற்றுள்ளது. எனவே 3 அணிகளில் எந்த 2 அணிகள் கடைசி போட்டியில் ஜெயிக்கிறதோ அந்த 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 3 அணிகளுமே வேறு 3 அணிகளை எதிர்கொள்வதால் ஒருவேளை 3 அணிகளும் ஜெயிக்கும் பட்சத்தில் நெட் ரன்ரேட் அடிப்படையில் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

Tap to resize

Latest Videos

நியூசிலாந்து அணி கடைசி போட்டியில் அயர்லாந்தையும், ஆஸ்திரேலிய அணி ஆஃப்கானிஸ்தானையும், இங்கிலாந்து அணி இலங்கையையும் எதிர்கொள்கின்றன. இதில் இங்கிலாந்து - இலங்கை இடையேயான போட்டிதான் சவாலானது. மற்ற 2 அணிகளான நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் முறையே அயர்லாந்தையும், ஆஃப்கானிஸ்தானையும் வீழ்த்தி வெற்றி பெற்றுவிடும்.

IND vs ZIM: இந்தியாவை தோற்கடிங்க.. ஜிம்பாப்வே பையனை திருமணம் பண்ணிக்கிறேன்.. பாகிஸ்தான் நடிகை கொடுத்த ஆஃபர்

நியூசிலாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி. ஆஸ்திரேலியா ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திவிடும். ஒருவேளை இங்கிலாந்து இலங்கையை வீழ்த்தினால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் இங்கிலாந்துதான் அரையிறுதிக்கு முன்னேறும். இப்போதைக்கு இங்கிலாந்தின் நெட் ரன்ரேட் +0.547 மற்றும் ஆஸ்திரேலியாவின் நெட் ரன்ரேட் -0.304. எனவே ஆஸ்திரேலிய அணி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக பெரிய வெற்றியை பெற்றாகவேண்டும். அதாவது இங்கிலாந்து இலங்கையை வீழ்த்தினாலும், இங்கிலாந்தின் நெட்ரன்ரேட்டை விட அதிகமான ரன்ரேட்டை பெறுமளவிற்கான வெற்றியை பெற்றாக வேண்டும். 

ஆஃப்கானிஸ்தான் வீழ்த்துவதற்கு எளிதான அணி அல்ல. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுவிடும். பெரிய வெற்றியை பெறும் முனைப்பில் கண்டிப்பாகவே சிறப்பாக ஆடும். ஆஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதி. இங்கிலாந்து அணி இலங்கையை வீழ்த்துவது அவ்வளவு எளிதாக இருக்காது. அப்படியே வீழ்த்தினாலும் பெரிய வெற்றியை பெறுவது கடினம் தான். எனவே ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை விட அதிக ரன்ரேட்டை பெறுவதற்கு தேவையான பெரிய வெற்றியை கண்டிப்பாக பெறும். இங்கிலாந்து இலங்கையை எதிர்கொள்வதால்  இங்கிலாந்துக்கான வாய்ப்பு கடினம் தான். எனவே க்ரூப் 1லிருந்து நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு முன்னேறும்.

விராட் கோலியின் ஃபேக் ஃபீல்டிங்.. 5 ரன் கேட்கும் வங்கதேசம்..! சர்ச்சை சம்பவத்தின் வைரல் வீடியோ

க்ரூப் 2ஐ பொறுத்தமட்டில் 4 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் ஆடி 5 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 2ம் இடத்திலும், 4 போட்டிகளில் ஆடி 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3ம் இடத்திலும் உள்ளன. இந்திய அணி கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்வதால் கண்டிப்பாக அந்த போட்டியில் வெற்றி பெற்றுவிடும் என்பதால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

கடைசி போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றால் 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். கடைசி போட்டியில் இந்தியாவும் ஜெயித்து, தென்னாப்பிரிக்காவும் ஜெயித்தால், பாகிஸ்தான் கடைசி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தினாலும் அரையிறுதிக்கு முன்னேற முடியாது.

IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.! 16 சீசன்களில் 14 கேப்டன்கள்.. புதிய கோச்களும் நியமனம்

அதேவேளையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளில் ஒன்று கடைசி போட்டியில் தோற்று, பாகிஸ்தான் ஜெயித்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால் கடைசி போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேவையும், தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தையும் எதிர்கொள்வதால் 2 அணிகளும் தோற்க வாய்ப்பேயில்லை. எனவே க்ரூப் 2லிருந்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
 

click me!