டி20 உலக கோப்பையில் நாளை நடக்கும் 2 போட்டிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டிகளாகும். அயர்லாந்தை எதிர்கொள்ளும் நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2 ஆகிய இரண்டிலுமே தலா 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு க்ரூப்களிலிருந்தும் தலா 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
க்ரூப் 1ல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தலா 4 போட்டிகளில் ஆடி தலா 5 புள்ளிகளை பெற்றுள்ளது. எனவே 3 அணிகளில் எந்த 2 அணிகள் கடைசி போட்டியில் ஜெயிக்கிறதோ அந்த 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 3 அணிகளுமே வேறு 3 அணிகளை எதிர்கொள்வதால் ஒருவேளை 3 அணிகளும் ஜெயிக்கும் பட்சத்தில் நெட் ரன்ரேட் அடிப்படையில் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
நியூசிலாந்து அணி கடைசி போட்டியில் அயர்லாந்தையும், ஆஸ்திரேலிய அணி ஆஃப்கானிஸ்தானையும், இங்கிலாந்து அணி இலங்கையையும் எதிர்கொள்கின்றன. இதில் இங்கிலாந்து - இலங்கை இடையேயான போட்டிதான் சவாலானது. மற்ற 2 அணிகளான நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் முறையே அயர்லாந்தையும், ஆஃப்கானிஸ்தானையும் வீழ்த்தி வெற்றி பெற்றுவிடும்.
நியூசிலாந்து - அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான 2 முக்கியமான போட்டிகளும் நாளை(நவம்பர் 4) அடிலெய்டில் நடக்கின்றன. வெற்றி கட்டாயத்தில் வாழ்வா சாவா போட்டிகளில் நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் களமிறங்குகின்றன.
அயர்லாந்தை எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். நியூசிலாந்து அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. அந்த அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் நன்றாக செட்டாகிவிட்டது. இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியிருந்தாலும், ஆடும் லெவனில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை.
அயர்லாந்தை எதிர்கொள்ளும் உத்தேச நியூசிலாந்து அணி:
ஃபின் ஆலன் (விக்கெட் கீப்பர்), டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன்.
விராட் கோலியின் ஃபேக் ஃபீல்டிங்.. 5 ரன் கேட்கும் வங்கதேசம்..! சர்ச்சை சம்பவத்தின் வைரல் வீடியோ
அதேபோல ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனிலும் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னரின் ஃபார்ம் கவலையளிக்கும் நிலையில், நாக் அவுட் சுற்று நெருங்கும் சூழலில் வார்னர் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டுமென்றால் வார்னர் நன்றாக ஆடவேண்டும்.
ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் உத்தேச ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.