இலங்கைக்கு எதிராக உலகக் கோப்பையில் 428 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா இன்றைய போட்டியில் நெதர்லாந்திடம் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 15ஆவது லீக் போட்டி இன்று தர்சமாலாவில் நடந்தது. மழையின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக டாஸ் போடப்பட்டது. அதன் பிறகு பெய்த மழையின் காரணமாக போட்டியானது 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 43 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.
முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையில் நெதர்லாந்து வரலாற்று சாதனை!
இதில், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 78 ரன்களும், ஆர்யன் தத் 23 ரன்களும், வான் டெர் மெர்வே 29 ரன்களும் எடுத்தனர். அதன் பிறகு பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. இதில், சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக அழுத்தமும், பதற்றமும் தென் ஆப்பிரிக்கா வீரர்களிடையே ஏற்பட்டது.
தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, ஹென்ரிச் கிளாசென் 28 ரன்னிலும், டேவிட் மில்லர் 43 ரன்னிலும், கெரால்டு கோட்ஸீ 22 ரன்னிலும் ஆட்டமிழக்க, கடைசியாக கேசவ் மகாராஜ் 40 ரன்களில் ஆட்டமிழக்கவே தென் அபபிரிக்கா 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Pakistan vs Australia: பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று – பயிற்சி ரத்து!
இதன் மூலமாக நெதர்லாந்து முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் 3 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இன்றைய 15ஆவது லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக நெதர்லாந்து, முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த தோல்வியின் மூலமாக ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது.
முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்த் அணிகளைத் தான் நெதர்லாந்து அணி வீழ்த்தியிருந்தது. மேலும், உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கூட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை டை செய்து, சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது தென் ஆப்பிரிக்கா அணியை தோற்கடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
மேலும், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் வெற்றியை நெதர்லாந்து பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி 8ஆவது இடம் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து 3ஆவது இடத்தில் நீடிக்கிறது.
இதற்கு முன்னதாக நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் நெதர்லாந்து அணியானது,
2003ல் நமீபியாவை 64 ரன்களில் வீழ்த்தியது
2007ல் ஸ்காட்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
2023ல் தென் ஆப்பிரிக்காவை 38 ரன்களில் வீழ்த்தியுள்ளது.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிரான 4ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த அணியாக வரலாற்று சாதனை படைத்தது. ஆனால் இன்று ஒரு பலம் குறைந்த கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம் 207 ரன்களில் ஆல் அவுட்டாகி 38 ரன்களில் தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் 7 முறை ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 6 முறையும் தென் ஆப்பிரிக்கா அணி தான் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. ஆனால், இன்று சாதனையை மாற்றி எழுதி நெதர்லாந்து புதிதாக வரலாற்று சாதனையை உருவாக்கியிருக்கிறது.