சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 8ஆவது போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 8ஆவது லீக் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியில் லுக் உட் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக குவேனா மபகா அணியில் இடம் பெற்றுள்ளார். ஹைதராபாத் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்கோ ஜான்சென் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று, நடராஜன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயதேவ் உனத்கட் அணியில் இடம் பெற்றுள்ளார். ரோகித் சர்மா இன்று தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். இதற்காக ரோகித் 200 என்று அச்சிடப்பட்ட ஜெர்சியை சச்சின் டெண்டுல்கர் அவருக்கு பரிசாக அளித்துள்ளார். இந்த ஜெர்சியுடன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SRH vs MI போட்டிக்கும் சூர்யகுமார் யாதவ் இல்லையா? ஃபிட்னெஸ்க்கு அனுமதி மறுப்பு!
மும்பை இந்தியன்ஸ்:
இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஜெரால்டு கோட்ஸி, ஷாம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜஸ்ப்ரித் பும்ரா, குவெனா மபகா.
மாற்று வீரர்கள்: டெவால்ட் பிரேவிஸ், ரொமாரியா ஷெஃபர்டு, முகமது நபி, விஷ்ணு வினோத், நேஹல் வதேரா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டிராவிஸ் ஹெட், மாயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (விக்கெட் கீப்பர்), புவனேஷ்வர் குமார், மாயங்க் மார்க்கண்டே, ஜெயதேவ் உனத்கட்.
மாற்று வீரர்கள்: நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், கிளென் பிலிப்ஸ், உபேந்திரா யாதவ்.
இது வரையில் இரு அணிகளும் மோதிய 21 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 12 போட்டியிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 235 ரன்கள் அடித்துள்ளது. இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்துள்ளது. எம்.ஐயின் குறைந்தபட்ச ஸ்கோர் 87. இதே போன்று ஹைதராபாத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 96.
MI வீரர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த திலக் வர்மா – வைரலாகும் வீடியோ!
மும்பை இந்தியன்ஸ் (4-1)
கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டியிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதுவே ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
SRH vs MI அதிகபட்ச ரன்கள்:
டேவிட் வார்னர் (SRH) – 12 போட்டி – 524 ரன்கள்;
ஷிகர் தவான் (SRH) – 12 போட்டி – 436 ரன்கள்
கெரான் போலார்டு (MI) – 17 போட்டி – 431 ரன்கள்
SRH vs MI அதிகபட்ச விக்கெட்டுகள்:
புவனேஷ்வர் குமார் (SRH) – 13 இன்னிங்ஸ் – 18 விக்கெட்டுகள்
ஜஸ்ப்ரித் பும்ரா (MI) – 13 இன்னிங்ஸ் – 16 விக்கெட்டுகள்
லசித் மலிங்கா (MI) – 9 இன்னிங்ஸ் – 13 விக்கெட்டுகள்
வெற்றி யாருக்கு?
இந்த சீசனில் இரு அணிகளும் விளையாடிய போட்டியில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை 6 ரன்களில் தோல்வி அடைந்துள்ளது. இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஏற்கனவே தோல்வி, இதுல அபராதம் வேறயா? சுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?
Mumbai Indians special poster for Rohit Sharma 🔥 pic.twitter.com/H9tYLXkm9E
— Johns. (@CricCrazyJohns)