IPL 2023: ஜடேஜா, சாண்ட்னெர் சுழலில் சுருண்டது மும்பை இந்தியன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எளிய இலக்கு

Published : Apr 08, 2023, 09:40 PM IST
IPL 2023: ஜடேஜா, சாண்ட்னெர் சுழலில் சுருண்டது மும்பை இந்தியன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எளிய இலக்கு

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 157 ரன்கள் மட்டுமே அடித்து 158 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சிஎஸ்கே அணி: 

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), ஷிவம் துபே, ட்வைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், சிசாண்டா மகளா, துஷார் தேஷ்பாண்டே. 

IPL 2023: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - மொயின் அலி

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அர்ஷத் கான், ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன்(12), சூர்யகுமார் யாதவ்(1), திலக் வர்மா(22), அர்ஷ்த் கான்(2), டிரிஸ்டான் ஸ்டப்ஸ்(5) ஆகிய அனைவருமே சொதப்பினர்.

அந்த பையன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மாதிரி.. மிகப்பெரிய மேட்ச் வின்னர்..! இந்திய அணிக்கு பாண்டிங் அட்வைஸ்

அதிரடியாக ஆடி 22 பந்தில் 31 ரன்கள் அடித்த டிம் டேவிட்டும் 17வது ஓவரில் ஆட்டமிழந்ததால் மும்பை அணியின் ஸ்கோர் குறைந்தது. 20 ஓவரில் 157 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 158 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 1st T20: அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் மரண அடி.. நியூசிலாந்தை ஊதித்தள்ளிய இந்தியா!
IND VS NZ T20: அதிரடியில் ரஸலையே ஓரம் கட்டிய 'சிக்சர் மன்னன்' அபிஷேக் ஷர்மா.. வரலாற்று சாதனை!