குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடம் பிடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 57ஆவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் களமிறங்கினர். இருவரும் இணைந்து பவர்பிளே என்று சொல்லப்படும் முதல் 6 ஓவர்களில் அதிரடியாக ஆடி 61 ரன்கள் சேர்த்தனர்.
சூர்யகுமார் யாதவ் 6 தான், ஆனால், ரஷீத் கான் 10: போராடி தோற்ற குஜராத் டைட்டன்ஸ்!
அதன் பிறகு ரோகித் சர்மா 29 ரன்களில் வெளியேற, இஷான் கிஷான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா 15 ரன்களில் ஆட்டமிழக்க, விஷ்ணு வினோத் 30 ரன்களில் வெளியேறினார். டிம் டேவிட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் உள்பட 103 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
ஒரே நாளில் செலிபிரிட்டியான சிஎஸ்கே ரசிகை: சினிமா வாய்ப்பு வருமா?
பின்னர் கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சஹா, கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விஜய் சங்கரும் 29 ரன்களில் வெளியேறினார். அபினவ் மனோகர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் திவேதியா 14 ரன்களில் வெளியேறவே குஜராத் டைட்டன்ஸ் அணி 12.1 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு ரஷீத் கான் தனது அதிரடி ஆட்டத்தை காட்ட ஆரம்பித்தார். அவர் 32 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் பிளே ஆஃப் ரேஸ் - பிளே ஆஃப் யாருக்கெல்லாம் அமையும்? நம்பர் 1ல் குஜராத், நம்பர் 2ல் சென்னை!
இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலமாக 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் 16 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே நீடிக்கிறது. 2ஆவது இடத்தில் சென்னையும், 4ஆவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இடம் பெற்றுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வி - பிளே ஆஃப் எப்படி? இன்னும் 2 போட்டி தான் இருக்கு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும். ஆனால், லக்னோ அணிக்கு 3 போட்டிகள் எஞ்சிய நிலையில், 3 போட்டியிலும் வெற்றி பெற்றால் 17 புள்ளிகள் பெறும். எனினும், இந்த ரேஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. கேகேஆர் அணிக்கு வாய்ப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை ஜெயித்தால் RR, LSG, RCB, KKR, PBKS, SRH, DC எல்லாத்துக்கும் தலைவலி!