IPL 2023: SRH-க்கு இழப்பதற்கு எதுவுமில்லை.. LSG-க்கு வாழ்வா சாவா போட்டி..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published May 12, 2023, 10:08 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான முக்கியமான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இந்த 2 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதி.

எஞ்சிய 2 இடங்களுக்கு சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸை தவிர மற்ற 6 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பிருப்பதால் போட்டி மிகக்கடுமையாக உள்ளது. ஒவ்வொரு போட்டியும் புள்ளி பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Latest Videos

IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்

11 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கான ரேஸில் இருக்கும் லக்னோ அணி, இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பில்லாத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நாளை பிற்பகல் ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் லக்னோ அணிக்கு இது முக்கியமான போட்டி. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக், கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், க்ருணல் பாண்டியா (கேப்டன்), ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், மோசின் கான், யஷ் தாகூர்.

ICC WTC ஃபைனல்: இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக தேர்வாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..?

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, அன்மோல்ப்ரீத் சிங், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச்  கிளாசன், க்ளென் ஃபிலிப்ஸ், அப்துல் சமாத், விவ்ராந்த் சர்மா, மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், மயன்க் மார்கண்டே, டி.நடராஜன்

click me!