IPL 2023: சூர்யகுமார் யாதவ் காட்டடி சதம்.. மெகா ஸ்கோரை அடித்து GT-க்கு கடின இலக்கை நிர்ணயித்தது மும்பை அணி

By karthikeyan V  |  First Published May 12, 2023, 9:54 PM IST

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்தால் (103) 20 ஓவரில் 218 ரன்களை குவித்து, 219 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. 
 


ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இந்த 2 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதி.  எஞ்சிய 2 இடங்களுக்கு சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸை தவிர மற்ற 6 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பிருப்பதால் போட்டி மிகக்கடுமையாக உள்ளது. 

இன்று மும்பை வான்கடேவில் நடந்துவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

Latest Videos

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நெஹல் வதேரா, திலக் வர்மா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப். 

ICC WTC ஃபைனல்: இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக தேர்வாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..?

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி. 

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களை குவித்தனர். 18 பந்தில் 29 ரன்களுக்கு ரோஹித்தும், 20 பந்தில் 31 ரன்களுக்கு இஷான் கிஷனும் ஆட்டமிழந்தனர். இருவருமே கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. நெஹல் வதேரா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்

சூர்யகுமார் யாதவுடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஷ்ணு வினோத் 30 ரன்கள் அடித்து65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் சதமடித்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த சதத்தை பூர்த்தி செய்தார். 49 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 218 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 219 ரன்கள் என்ற கடினமான இலக்கை குஜராத் அணிக்கு நிர்ணயித்தது.
 

click me!