டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது கேமராவில் சிக்கிய சிஎஸ்கே ரசிகை ஒரே நாளில் செலிபிரிட்டி அளவுக்கு வலம் வந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டுவருகின்றன. தற்போது வரையில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. கடந்த 10 ஆம் தேதி சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான 55ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் ஆடியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஐபிஎல் பிளே ஆஃப் ரேஸ் - பிளே ஆஃப் யாருக்கெல்லாம் அமையும்? நம்பர் 1ல் குஜராத், நம்பர் 2ல் சென்னை!
இதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னையில் நடக்கும் போட்டி என்றால் சினிமா செலிபிரிட்டி இல்லாமல் இருக்காது. அது மட்டுமல்லாமல் வியக்க வைக்கும் வகையில் ரசிகர்களின் வருகையும் இருக்கும். மேலும், தோனி களமிறங்கும் போது ரசிகர்களின் ஆரவாரம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சென்னை வீரர்கள் பீல்டிங்கில் இருக்கும் போது கேட்ச் பிடிக்கும் போது சரி, பீல்டிங் செய்யும் போதும் சரி ரசிகர்களின் விசில் சத்தமும கரகோஷமும் தான் அதிகமாக் இருக்கும். அப்படி அவர்களது செயல் வித்தியாச்மானதாக இருந்தால் அவர்கள் எப்படியாவது கேமராவில் சிக்காமல் இருக்க மாட்டார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வி - பிளே ஆஃப் எப்படி? இன்னும் 2 போட்டி தான் இருக்கு!
அப்படி சிக்கியவர்களில் ஒருவர் தான் பெண் ரசிகை. அவரை பாக்கும் போது குடும்ப பெண் போன்று சுடிதார் அணிந்து வந்துள்ளார். கையில் விசில் வைத்துக் கொண்டு சென்னை வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும், பந்தை தவற விடும்போது அவர் செய்த குறும்புத்தனம் தான் கேமரா மேனை வியக்க வைத்துள்ளது.அதனால் தான் அவர் கேமராவில் சிக்கியிருக்கிறார். சென்னை வீரர்கள் பந்தை தவறவிட்ட போது பரிதாபமாக அச்சோ என்று அவர் செய்த குறும்புத்தனமான செயல் தான் இப்போது டிரெண்டிங். இனி அவர் ஹீரோயினாக கூட வருவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மும்பை ஜெயித்தால் RR, LSG, RCB, KKR, PBKS, SRH, DC எல்லாத்துக்கும் தலைவலி!