மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் வலுவாக உள்ளன. இந்த 2 அணிகளும் இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும்.
எஞ்சிய 2 இடங்களுக்குத்தான் 6 அணிகளூக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸை தவிர மற்ற 6 அணிகளும் பிளே ஆஃப் ரேஸில் உள்ளன. ஒவ்வொரு போட்டியுமே புள்ளி பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில், இன்றைய போட்டியில் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸும். நடப்பு சாம்பியம் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன. இரு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ICC WTC ஃபைனல்: இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக தேர்வாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..?
இந்த போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நெஹல் வதேரா, திலக் வர்மா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.