ஐபிஎல்லில் அபார பேட்டிங்.. ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..?

By karthikeyan V  |  First Published May 12, 2023, 5:32 PM IST

யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
 


ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. லீக் சுற்று முடியவுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியுமே நாக் அவுட் போட்டி போன்றது. சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸை தவிர மற்ற அனைத்து அணிகளுமே பிளே ஆஃபிற்கான ரேஸில் இருப்பதால் ஐபிஎல் சூடுபிடித்துள்ளது.

இந்த சீசனில் திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஆகிய இளம் வீரர்கள் அபாரமான இன்னிங்ஸ்களை ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். திலக் வர்மா மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் அபாரமாக ஆடி அசத்திவருகிறார். ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி அசாத்தியமான வெற்றியை கேகேஆருக்கு பெற்று கொடுத்து தன்னை ஒரு ஃபினிஷராக நிரூபித்ததுடன், அதன்பின்னரும் பல போட்டிகளில் கடைசி ஓவரில் அபாரமாக ஆடி த்ரில் வெற்றிகளை பெற்று கொடுத்து ஃபினிஷராக நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.

Latest Videos

IPL 2023: முக்கியமான போட்டியில் செம கெத்தான MI vs GT பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த சீசனில் ஒரு சதம் உட்பட 12 போட்டிகளில் மொத்தமாக 575 ரன்களை குவித்து ஃபாஃப் டுப்ளெசிஸை விட ஒரு ரன் மட்டுமே குறைவாக உள்ளார். கேகேஆருக்கு எதிரான போட்டியில் 13 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 47 பந்தில் 98 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தாலும் சதமடிக்க முடியவில்லை. அவரது அதிரடியான பேட்டிங்கால் 14வது ஓவரிலேயே 150 ரன்கள் என்ற இலக்கை அடித்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

வெறும் 2 ரன்னில் ஐபிஎல்லில் 2வது சதத்தை அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இந்த சீசனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி அனைவரையும் கவர்ந்ததுடன், இந்திய அணி தேர்வாலர்களை தன்னை புறக்கணிக்கமுடியாத அளவிற்கு ஆடிவருகிறார். 

இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை எடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் கதவுகளை தட்டவில்லை; தகர்க்கிறார். தொடர்ச்சியாக தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் இந்திய அணி கதவுகளை உடைக்கிறார். எப்பேர்ப்பட்ட திறமைசாலி இவர்.. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் மிகச்சிறந்த கைகளில் தான் உள்ளது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

ஹர்பஜன் சிங்கின் கருத்துடன் உடன்பட்ட ரவி சாஸ்திரி, ஒருநாள் உலக கோப்பை மீது மட்டும் தான் இந்திய அணியின் கவனம் இருக்கிறது என்றால், தேர்வாளர்கள் கண்டிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங்கை அணியில் எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கு இவர்களை தயார்ப்படுத்த வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
 

click me!