ஐபிஎல் பிளே ஆஃப் ரேஸ் - பிளே ஆஃப் யாருக்கெல்லாம் அமையும்? நம்பர் 1ல் குஜராத், நம்பர் 2ல் சென்னை!

By Rsiva kumar  |  First Published May 12, 2023, 4:38 PM IST

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் தகுதி பெறுவதற்காக ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியானது மாதிரி தான். மும்பைக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் குஜராத் வெற்றி பெற்றால் 18  புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும். 2ஆவது அணிக்கான வாய்ப்பு சென்னைக்கு கிடைத்துள்ளது. 15 புள்ளிகளுடன் சென்னை அணி 2ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 2 போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் சுற்று உறுதி செய்யப்படும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வி - பிளே ஆஃப் எப்படி? இன்னும் 2 போட்டி தான் இருக்கு!

Tap to resize

Latest Videos

மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்று இடம் பிடித்துள்ளது. இதில் இன்னும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 56.3 சதவிகிதம் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு அமைந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 4ஆவது இடம் பிடித்துள்ளது. 12 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடிக்கும். மும்பை மட்டும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்பட மற்ற அணிகளுக்கு பிளே ஆஃப் சுற்றில் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மும்பைக்கு 75.3 சதவிகிதம் பிளே ஆஃப் வாய்ப்பு அமைந்துள்ளது.

மும்பை ஜெயித்தால் RR, LSG, RCB, KKR, PBKS, SRH, DC எல்லாத்துக்கும் தலைவலி!

லக்னோ சுப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 11 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளது.  இன்னும்  3 போட்டிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் லக்னோவிற்கு பிளே ஆஃப் வாய்ப்பு 43.7 சதவிகிதம் மட்டுமே உள்ளது. 

தற்போது 10 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ அணி 6ஆவது இடத்தில் உள்ளது.  இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில், 3 போட்டியிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெறும். அப்படியே இருந்தாலும் ஆர்சிபிக்கு 35.4 சதவிகிதம் மட்டுமெ பிளே ஆஃப் வாய்ப்பு அமைந்துள்ளது.

கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், கேகேஆருக்கு 15.1 சதவிகிதம் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு அமைந்துள்ளது.

கமல் ஹாசனை மறைமுக சாடிய லட்சுமணன் சிவராமகிருஷ்ணனை விமர்சனம் செய்த நெட்டிசன்கள்!

பஞ்சாப் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில் 3 போட்டியிலும் ஜெயித்தால் கூட 16 புள்ளிகள் பெறும். மேலும், 35 சதவிகிதம் மட்டுமே பிளே ஆஃப் கிடைத்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது.  இன்னும் 4 போட்டிகள் உள்ள நிலையில், 4 போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட 23.1 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி சஹால் சாதனை; டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்து முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி உள்ளது. சென்னைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்திருக்கும். இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில் 6.9 சதவிகிதம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!