ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய முக்கியமான போட்டியில் களமிறங்கும் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. லீக் போட்டிகள் முடியவுள்ள நிலையில், இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே நாக் அவுட் போட்டிதான். 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 15 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே ஆகிய 2 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
எஞ்சிய 2 இடங்களுக்கு சன்ரைசர்ஸ், டெல்லிய தவிர மற்ற அனைத்து அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி இருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குத்தான் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
முதலிடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும், 4ம் இடத்தில் இருக்கும் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 வலுவான அணிகளும் மும்பை வான்கடேவில் நடக்கும் இன்றைய போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்
இரு அணிகளுமே வலுவான மற்றும் கோப்பையை வெல்லும் உத்தி அறிந்த அணிகள் என்பதாலும் இந்த அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷன் செட் ஆகிவிட்டதாலும் பெரிதாக மாற்றங்கள் எதுவும் செய்ய விரும்பாத அணிகள் ஆகும். அதனால் இரு அணிகளின் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படாது. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்கும்.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நெஹல் வதேரா, திலக் வர்மா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.