WPL 2023: மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளின் விவரம்

Published : Feb 14, 2023, 06:26 PM IST
WPL 2023: மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளின் விவரம்

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக்கிற்கான ஏலம் நேற்று முடிந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் விவரங்களை பார்ப்போம்.  

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல் சீசனுக்கான ஏலம் நேற்று மும்பையில் நடந்தது. இந்த ஏலத்தில் ஸ்மிரிதி மந்தனா ரூ.3.4 கோடி என்ற அதிகபட்ச தொகைக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார்.  ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னெர் மற்றும் இங்கிலாந்து ஆல்ரவுடண்டர் சைவர் பிரண்ட் ஆகிய இருவரும் தலா ரூ.3.2 கோடிக்கு விலைபோனார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்மன்ப்ரீத் கௌர், யஸ்டிகா பாட்டியா, பூஜா வஸ்ட்ராகர், சோனம் யாதவ் ஆகிய இந்திய வீராங்கனைகளை வாங்கியது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சைவர் பிரண்ட்டையும் 2வது அதிகபட்ச தொகைக்கு வாங்கியது. 

IND vs AUS: 2வது டெஸ்ட்டிலிருந்து ஜெய்தேவ் உனாத்கத்தை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்

ஆர்சிபி அணி ஸ்மிரிதி மந்தனாவை அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு வாங்கியது. ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனை எலைஸ் பெர்ரி, இந்திய வீராங்கனைகள் ரிச்சா கோஷ், ரேணுகா சிங் ஆகியோரையும் ஆர்சிபி அணி வாங்கியது. ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகளுமே பலமான அணிகளாக திகழும் நிலையில், அந்த 2 அணிகளையும் பார்ப்போம்.

மும்பை இந்தியஸ் அணி:

ஹர்மன்ப்ரீத் கௌர், நடாலி சைவர், அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், யஸ்டிகா பாட்டியா, ஹீத்தர் கிரஹாம், இசாபெல்லி வாங், அமன்ஜாத் கௌர், தாரா குஜ்ஜார், சாய்கா இஷாக், ஹைலி மேத்யூஸ், க்ளோ ட்ரயான், ஹுமைரா காஸி, பிரியங்கா பாலா, சோனம் யாதவ், ஜிந்தாமனி கலிதா, நீலம் பிஷ்ட்.

IND vs AUS: முதல் டெஸ்ட்டுக்கு முன்பே கணித்த பாண்டிங்.. கண்டுக்காம தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா

ஆர்சிபி அணி:

ஸ்மிரிதி மந்தனா, சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், எரின் பர்ன்ஸ், திஷா கசட், இந்திரானி ராய், ஷ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, ஹீத்தர் நைட், டேன் வான் நியெகெரிக், ப்ரீத்தி போஸ், பூனம் கெம்னார், கோமல் ஸன்ஸாத், மேகான் ஸ்கட்,  சஹானா பவார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!