
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் வரும் 16ம் தேதியும், 2வது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி வெலிங்டனிலும் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான பயிற்சி போட்டி ஹாமில்டனில் நடந்துவரும் நிலையில், இதில் காயமடைந்த நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவரது ஃபாஸ்ட் பவுலிங் பார்ட்னரான மேட் ஹென்ரியும் முதல் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார்.
IND vs AUS: 2வது டெஸ்ட்டிலிருந்து ஜெய்தேவ் உனாத்கத்தை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்
2 ஃபாஸ்ட் பவுலர்கள் அணியிலிருந்து விலகியது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு. நியூசிலாந்து கண்டிஷனில் கைல் ஜாமிசன் முக்கியமான பவுலர். அவர் இந்த தொடரில் ஆடாதது நியூசிலாந்துக்கு கண்டிப்பாக பின்னடைவாக அமையும். ஜாமிசன் நியூசிலாந்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்து அணி:
டிம் சௌதி (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், டாம் பிளண்டெல், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, ஸ்காட் குஜெலின், டாம் லேதம், டேரைல் மிட்செல், ஹென்ரி நிகோல்ஸ், இஷ் சோதி, பிளைர் டிக்னெர், நீல் வாக்னெர், கேன் வில்லியம்சன், வில் யங்.
IND vs AUS: முதல் டெஸ்ட்டுக்கு முன்பே கணித்த பாண்டிங்.. கண்டுக்காம தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா
இங்கிலாந்து அணி:
ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி ப்ரூக், டேனியல் லாரன்ஸ், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், வில் ஜாக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் லீச், மேட்டி பாட்ஸ், ஆலி ராபின்சன், ஆலி ஸ்டோன்.