பாபர் அசாமை தூக்கிட்டு பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிங்க..! ஹசன் அலி அதிரடி

By karthikeyan VFirst Published Feb 14, 2023, 5:19 PM IST
Highlights

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்க ஷதாப் கான் தகுதியான வீரர்; அவர் அதற்கு தயாராகவும் இருக்கிறார் என்று ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்ற இடத்திற்கு உயர்ந்துவிட்ட பாபர் அசாமின் கேப்டன்சி கேள்விக்குள்ளானது. மிகச்சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார்.

பாபர் அசாமின் கேப்டன்சி அந்த அணியின் தொடர் தோல்விகள் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளானது. டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வு பாரபட்சமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. பாபர் அசாம் தனக்கு நெருக்கமான மற்றும் வேண்டப்பட்ட வீரர்களை அணியில் தேர்வு செய்ததாக விமர்சிக்கப்பட்டது. 

IND vs AUS: 2வது டெஸ்ட்டிலிருந்து ஜெய்தேவ் உனாத்கத்தை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்

அண்மையில், சக வீரர் ஒருவரை அணியில் தேர்வு செய்ய, அவரது காதலியுடன் ஆபாசமாக பேசியதாக சர்ச்சை வெடித்தது. 3 ஃபார்மட்டிலும் கேப்டன்சி செய்வதால் அவரது பேட்டிங் பாதிக்கப்படுகிறது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இப்படியாக அவரை கேப்டன்சிக்கு எதிரான கருத்துகள் வலுத்துவருகின்றன.

மேலும், இங்கிலாந்துக்கு எதிராக 3-0 என டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வியை சந்தித்தது. அதன்பின்னரே, பாபர் அசாமை கேப்டன்சியிலிருந்து நீக்குவது குறித்து பேசப்படுகிறது.

IND vs AUS: முதல் டெஸ்ட்டுக்கு முன்பே கணித்த பாண்டிங்.. கண்டுக்காம தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஹசன் அலி, ஷதாப் கான் பாகிஸ்தான் அணியின் கேப்டன்சியை ஏற்க தயாராக இருக்கிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கேப்டனாக நிரூபித்திருக்கிறார் ஷதாப் கான். பாகிஸ்தான் அணியையும் 2 போட்டிகளில் கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். எந்தவிதமான சவாலையும் ஏற்று, தனது பெஸ்ட்டை கொடுக்க ஷதாப் கான் தயாராகவே இருக்கிறார் என்று ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
 

click me!