டெல்லி, கொல்கத்தாவிற்கு ஆப்பு வச்ச ஹோம் மைதானம்; மும்பை, பெங்களூருக்கு எப்படியோ?

By Rsiva kumar  |  First Published May 21, 2023, 12:51 PM IST

டெல்லி மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடந்த போட்டிகளில் அந்தந்த அணிகள் தோல்வி அடைந்துள்ளன.


டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 67ஆவது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய சென்னை 223 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த்து. இதே போன்று கொல்கத்தா மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 176 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 175 ரன்கள் எடுத்து ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 4ஆவது அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா வெளியேறியது.

பிளே ஆஃப் போட்டியில் 3 டீம்: மும்பைக்காக விட்டுக்கொடுக்குமா ஹைதராபாத் ? இல்லை தன்னோடு கூட்டிச் செல்லுமா?

Tap to resize

Latest Videos

ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் தோல்வி அடைந்துள்ளன. இதே போன்று இன்று மும்பையிலும், பெங்களூருவிலும் கடைசி 2 லீக் போட்டிகள் நடக்கின்றன. இதில், மும்பையில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதே போன்று பெங்களூரு மைதானத்தில் நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் பலம் வாய்ந்த அணிகள் என்பதால், எப்படியாவது வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து 4ஆவது அணியாக பரிதாபமாக வெளியேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஒருவேளை டெல்லி மற்றும் கொல்கத்தாவைப் போன்று மும்பை மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடக்கும் போட்டிகளில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் கோலி கோலி என்று கோஷமிட்ட ரசிகர்கள்: காம்பீர் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நவீன் உல் ஹக்!

click me!