சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு அமையும்.
வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 69ஆவது போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து கடைசி இடத்திற்கான போட்டியி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டி போட்டுகின்றன.
பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து 4ஆவது அணியாக பரிதாபமாக வெளியேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஆனால், அதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்கவேண்டும். ஒருவேளை இரு அணிகளும் இன்றைய கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் பாசிட்டிவான ரன்ரேட் கொண்டுள்ள ஆர்சிபி தான் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
கொல்கத்தாவில் கோலி கோலி என்று கோஷமிட்ட ரசிகர்கள்: காம்பீர் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நவீன் உல் ஹக்!
ஒருவேளை இரு அணிகளும் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் இதுவரையில் நேருக்கு நேர் 20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 11 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் ஹைதராபாத் வெற்றி கண்டுள்ளது.
கடைசி வரை போராடிய ரிங்கு சிங்; 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்!
அதே போன்று கடந்த 6 போட்டிகளில் 4ல் மும்பையும், 2ல் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கடைசியாக நடந்த பிளே ஆஃப் சுற்றுக்கான முக்கிய போட்டிகளில் ஹோம் மைதானத்தில் நடந்த போட்டிகளில் அந்தந்த அணிகள் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளன. உதாரணத்திற்கு டெல்லி மற்றும் கொல்கத்தா. அதே போன்று இன்று நடக்க உள்ள மும்பை மற்றும் பெங்களூரு போட்டிகளில் அந்த அணிகள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.